புதுமுகங்கள் ராஜன் தேஜேஸ்வர் – தருஷி நடிக்கும் “ செயல் “
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “
ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு. இவர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தை இயக்கியவர். 15 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கும் படம் இது.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
வட சென்னையில் தங்கசாலை மார்கெட்டை தன் வசம் வைத்துக் கொண்டிருக்கும் தண்டபாணியை, அங்கு மளிகை சாமான் வா...









