உள்ளூர் சுவையில் உலகத்தரத்தில் வெளியாகும் ‘ஜப்பான்’” ; 25வது படம் குறித்து கார்த்தி மகிழ்ச்சி
நடிகர் கார்த்தியின் நடிப்பில் அவரது 25வது படமாக இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் #ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தயாராகி வருகிறது.
“ஒரு க்ரைம் திரில்லராக உருவாகும் இப்படம் மனித வேட்டையையும் உள்ளடக்கியது. ஆனால் இதையெல்லாம் தாண்டி இப்படத்தின் கதையும் கதாபாத்திரங்களும் ஆழமாக பின்னப்பட்டுள்ளன. மேலும் பல ஆரவாரமான அம்சங்களும் கொண்ட தனித்தன்மை கூட்டணியாக உருவாகி வருகிறது..” என்கிறார் நாயகன் கார்த்தி.
தென்னிந்திய சினிமாவின் மிக பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜூ முருகன் இயக்குகிறார். “துணிச்சலான மற்றும் உற்சாகமான அதேசமயம் ஆர்ப்பாட்டமில்லாத இந்த...
பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்
மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தெலுங்கு நடிகர் ஜே டி சக்கரவர்த்தியும் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவும் நடிக்கின்றனர்.
பாக்யராஜ் நடிப்பு இயக்கத்தில் 90களில் உருவான பெரும்பாலான திரைப்படங்கள் பான்-இந்தியா கதையம்சம் கொண்டவை என்பதால் அவை மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றன. அப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட திரைப்படமாக இது அமையும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குந...
திரையுலகின் திறமைமிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் சினிமா யுனிவர்ஸில் முதல் திரைப்படமாக உருவாகும் திரைப்படம் ஹனு மான். இளம் ஹீரோ தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் இப்படம் தற்போது படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திரைப்படத்தில் சில உயர்தர VFX காட்சிகள் உள்ளதால், உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை வழங்க வேண்டுமென படம்குழு தீவிர கவனம் எடுத்து உழைத்து வருகிறது. டீஸர் அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் ரசிகர்களுக்கு சிறந்த சினிமா அனுபவத்தை தரவேண்டுமென்பதில் படக்குழுவினர் தெளிவாக உள்ளனர்.
இதற்கிடையில் ஹனு மான் தயாரிப்பு தரப்பிலிருந்து ரசிகர்கள் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பண்டிகை கொண்டாட்டமாக ஒரு கச்சிதமான போஸ்டரை வெளியிட்டு, படத்திற்கான விளம்பரங்...
மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் பான் இந்தியன் திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் அற்புதமான 2வது சிங்கிள் "வீடு" பாடல் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது
பான் இந்திய பிரமாண்டமாக உருவாகும் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் இசை பயணத்தை முதல் சிங்கிள் பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கினார்கள், அது சூப்பர் ஹிட்டாக மாறியது. டைகர் நாகேஸ்வர ராவின் காதல் கோணத்தை இந்தப் பாடல் காட்டியது. இப்போது, டைகர் நாகேஸ்வர ராவின் மற்றொரு பக்கத்தைக் காட்ட வேண்டிய நேரம் இது. செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இரண்டாவது பாடலான வீடு, டைகர் நாகேஸ்வர ராவின் அவதாரத்தைக் காட்டும்.
தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் ரவி தேஜா, டைகர் நாகேஸ்வர ராவ் பாத்திரத்தில் கண்களில் பொறி பறக்க உக்கிரமாக நடப்பதைக் காணலாம். அவர் பீடி புகைக்கும்போது, அவருக்குப் பின்னால் இ...
ஷாருக்கானின் 'ஜவான்' இந்தியாவில் 500 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நோக்கி பயணிக்கிறது. இந்தத் திரைப்படம் வெளியான 13 நாட்களில் தென்னிந்திய மாநிலங்களிலும் புதிய வசூல் சாதனையை படைத்துள்ளது..!
ஷாருக்கான் தனது நடிப்பில் வெளியான 'பதான்' படத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் பயணிக்கிறார். அத்துடன் அவரது நடிப்பில் வெளியான 'ஜவான்' திரையுலகில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கி பயணிக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் அபாரமாக வசூலித்து, 500 கோடி ரூபாய் கிளப்பில் பிரவேசித்திருக்கிறது. அத்துடன் உலகளவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதற்கு உத்வேகத்துடன் பயணிக்கிறது.
'ஜவான்' வெற்றியின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த திரைப்படம் தென்னிந்திய திரையுலக சந்தையிலும் சிறப்பான வரவேற்பை ப...
நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கும் படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார்.
திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்.28ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடுகிறது.
கதாநாயகன் சித்தார்த் என்பதால் அவரது பெயரில் பாதியை இப்படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனரோ என்று பலரும் கேட்கிறார்களாம். அது காரணமல்ல என படக்குழு மறுத்துள்ளது. ‘‘என்னுடைய நண்பரான விஜய் சேதுபதியும் இதையேதான் கேட்டார்.
காரணம...
ஜெயம் ரவி- நயன்தாரா நடித்துள்ள 'இறைவன்' டிரெய்லர் உறைய வைக்கும் பல திரில்லர் காட்சிகளை கொண்டுள்ளது!
பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'இறைவன்' படத்தில் நடிகர் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் பொருந்திப் போகும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை டிரெய்லர் தெளிவாக காட்டுகிறது.
2 நிமிடம் 35 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டிரெய்லர் ஒரு மனநோயாளி கொலையாளியின் (ராகுல் போஸ் நடித்துள்ளார்) இருண்ட உலகத்தையும், கதாநாயகனின் (ஜெயம் ரவி) வருகையையும் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நேர்மையும் கோபமும் கொண்ட இளம் காவல் துறை அதிகாரியாக ஜெயம் ரவி வருகிறார். ஆனாலும், எதிர்பாராத அவரது பயணம் எதிராளியை தேடி புதிரான இடத்திற்குள் அழைத்து செல்கிறது.
இயக்குநர் அகமதுவின் முந்தைய படங்களான ...
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்ட இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி பேசியதாவது, “முத்தையா சார் சிவில் வார் நடந்த ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளா...
விஜய் சேதுபதி நடிக்கும் 50-ஆவது படத்துக்கு ‘மகாராஜா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றமும் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ‘விடுதலை பாகம் 1’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையடுத்து அவர் நடிக்கும் 50-வது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்குகிறார். படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
2017 ஆம் ஆண்டில், நித்திலன் என்ற புதுமுகம் குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் நிறைய தலைகளை மாற்றினார், இது நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதே ஆண்டு லோகேஷ் கனகராஜும் மாநகரம் மூலம் அறிமுகமானார், ஸ்ரீ கணேஷ் 8 தோட்டாக்கள் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.
மூன...