செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

ஜிவி பிரகாஷின் “ரெபல்” விமர்சனம் 3/5

 

 

 

மூணார் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்களில் கூலிகளாக பணியாற்றி வரும் தமிழர்கள் தங்களைப் போன்று தங்களது பிள்ளைகளும் கஷ்ட்டப்படக்கூடாது, அவர்களின் வாழ்க்கை நிலை மாற வேண்டும் என்றால் அவர்கள் எப்படியாவது படித்து முன்னேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதன்படி அவர்களது பிள்ளைகளும் படித்துவிட்டால் நம் வாழ்க்கை மாறிவிடும் என்று நம்புவதோடு, பட்டப்படிப்பு படிப்பதற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரிக்கு செல்கிறார்கள்.

 

ஆனால், அந்த கல்லூரியில் சக மாணவர்களுக்கு கிடைக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எதுவும் தமிழ் மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதேபோல், அங்கிருக்கும் இரண்டு மாணவர் அமைப்புகள் தமிழ் மாணவர்களை ராக்கிங் என்ற பெயரில் கொடுமைப்படுத்துவதோடு,  அவர்களை அடக்கி ஆளும் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இவற்றை சகித்துக்கொண்டு எப்படியாவது படிப்பை முடித்துவிட வேண்டும், என்று அடங்கிப் போகும் தமிழ் மாணவர்கள், ஒரு கட்டத்தில் அமைதி இழந்து நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் புரட்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுடைய புரட்சி தமிழ் மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? அல்லது படிக்க வேண்டும் என்ற அவர்களது கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததா? என்பதை சொல்வது தான் ‘ரெபல்’.

 

கல்வி, பொருளாதாரத்தில் முன்னோக்கி  செல்ல நினைக்கும் ஒரு சராசரி ஏழை மாணவராக கனவுடன் வரும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு அந்த கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை கண்டு அதிர்ந்தாலும், அதை எதிர்த்து மாணவர்களை திரட்டி போராடும் காட்சிகளில் ஆவேசமும்,  ஆக்ரோஷம் தெறிக்க விடுகிறார். ஆனால் ஜிவி உழைப்பு கதையின் வலுவை தாங்க முடியாமல் போவகிறது.

நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜுவுக்கு பெருசா ஒன்னும் வேலை இல்லை.

கல்லூரி பேராசிரியராக கருணாஸ், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தையாக சுப்பிரமணிய சிவா, இருவரின் கதாபாத்திரங்களும் நினைவில் நிற்கிறது.

 

தமிழ் மாணவர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத், ஆதித்யா பாஸ்கர், ஆண்டனி ஆகியோர் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

 

மலையாள மாணவர்கள் அமைப்பின் தலைவர்களாக நடித்திருக்கும் வெங்கடேஷ் மற்றும் ஷலுரஹீம் அடக்குமுறையின் வன்மத்தை தங்களது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

மொத்த்த்தில் 80துகளில் நடந்த உண்மைசம்பவத்தை த்ழுவி எடுக்கப்பட்ட்தாக சொல்லப்பட்டலும் இப்போது இந்த கதை அவசியமில்லாத்துதான். அதோடு படம் முழுக்க மாணவர்களுக்கிடையே அடிதடி சண்டை எனபதும் ச்லிப்பை தருகிறது.

 

கோடங்கி

மதிப்பீடு 3/5.

 

 

 

50 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன