
”ரத்த வாடை”… இயக்குனராக ஜெயிக்க நடிகரை தொலைத்த ராயன்! – கோடங்கி விமர்சனம் 2.25/5
இசை- ஏ.ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு ஓம்.பிரகாஷ்.
நடிகர்கள் : எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன்,
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் படம் ராயன். இது அவரின் 50வது படம்.
இந்த பட்த்தில் தனுஷ் என்ன சொல்ல வருகிறார். பவர் பாண்டி மூலம் தான் ஒரு சிறந்த இயக்குனராக அடையாளம் பெற்ற தனுஷ் இந்த ராயன் மூலம் அதை தக்க வைத்து கொள்கிறாரா? தவற விடுகிறாரா? வாங்க பாக்கலாம்…
தென் மாவட்ட்த்தில் ஏதோ ஒரு கிராமத்தில் கருப்பு வெள்ளையில் ஆரம்பிக்கிறது கதை… அம்மா-அப்பா இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என ஒரு ஏழை குடும்பத்தில் மூத்த மகன் காத்தவராயனாக தனுஷ்…
தங்கை கைக்குழந்தையாக இருக்கும் போது டவுனுக்கு போய் வருவதாக சொல்லிச் செல்லும் அம்மவும் ,அப்பாவும் வீடு திரும்பவே இல்லை… கடும் மழை வேறு… இரவெல்லாம் காத்திருந்தும் இருவரும் வராமல் போனதால் அந்த ஊர் பூசாரியிடம் போய் நிற்கிறார் ராயன்.
கையில் குழந்தையாக தங்கையையும், 2 தம்பிகளையும் அழைத்து வந்த ராயனிடம் இரவு அங்கேயே தங்க சொல்கிறார் பூசாரி…
அதை நம்பி அங்கே தங்கும் ராயனுக்கு தன் தங்கையை அந்த பூசாரி யாருக்கோ விற்க முடிவு செய்த்து தெரிந்த்தும் அங்கிருந்து தப்பிக்க முயற்ச்சிக்கும் போது பூசாரி தனுஷ் கையில் இருக்கும் குழந்தையை பிடுங்க… ஆத்திரத்தில் அங்கிருக்கும் வீச்சரிவாளை எடுத்து பூசாரியை வெட்டிச் சாய்க்கிறார் ராயன்….
பின்னர் அங்கிருந்து ஒரு லாரியில் தப்பித்து சென்னை வருகிறார் ராயன். அவர் வந்த காய்கறி லாரி செல்வராகவனுக்காக மார்க்கெட்டுக்கு வந்திருக்கிறது. அப்படியே அவரிடம் வேலை செய்தபடியே தம்பி, தங்கையை வளர்க்கிறார். தம்பிகளாக சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம். தங்கையாக வருபவர் துஷாரா விஜயன். படிக்கிறவங்க வசதிக்காக பெரிய தம்பி சந்தீப், சின்ன தம்பி காளிதாஸ் தங்கை துஷாரா அப்படின்னு வைச்சிக்கலாம்.
அண்ணன் ராயன் தனுஷ் அதே ஏரியாவில் டானாக இருக்கும் சரவணன் தயவில் பாஸ்ட்புட் கடை நடத்துகிறார். ஒரு டான் இருந்தா இன்னொரு குட்டி டான் இருக்கனும் இல்ல… அந்த குட்டி டான் யாருன்னா நம்ப எஸ்.ஜே.சூர்யா. அவரு எப்படியாவது பெரிய டான் சரவணன போட்டுத்தள்ள டைம் பாத்துகிட்டிருக்கார்…
இது எதுக்குன்னா… குட்டி டான் எஸ்.ஜே.சூர்யா அப்பாவை பெரிய டான் சரவணன் ஏற்கனவே போட்டுத்தள்ளி இருப்பார்… அப்பாவை போட்ட சரவணனை பழி தீர்க்க எஸ்.ஜே.சூர்யா காத்துகிட்டிருக்கார்…
இப்படி உள்ள சூழல்ல வெட்டுக்குத்துன்னு நாம இருக்குறதால நம்ப பையனுக்கு ஆபத்து வந்துடக்கூடாதுன்னு வெளி நாட்டுல படிக்க வைப்பார் சரவணன்… படிப்பு முடிச்சிட்டு ஊர் திரும்புன அவன போடச் சொல்லி குட்டி டான் ஆள் அனுப்ப… பார்ல வேற பஞ்சாயத்தாகி ராயனோட பெரிய தம்பி சந்தீப் என்னமோ பேசப்போக அது சண்டையாகி ஒரே அடிதடியா போக அந்த பார்லயே சரவணன் பையன போட்டுத் தள்ளிடுறாங்க….
இது தெரிஞ்ச பெரிய டான்… ராயனோட பெரிய தம்பிய போட்டுத்தள்ள பிளான் போட… இத புரிஞ்சிகிட்ட ராயன் தம்பிகளோட போய் பெரிய டான் சரவணனையும் அவங்க அடியாள் கூட்ட்த்தையும்… எத்தனைன்னு கணக்கெல்லாம் தெரியல… எல்லாத்தயும் குத்திக்கிழிச்சி போட்டுட்டு சத்தமில்லாம வீட்டுக்கு போயிடுறாரு…
அப்பறம் ஒன்னுமே தெரியாத மாதிரி தம்பிங்களோட பாஸ்ட்புட் கடைக்கு போகும் போது ஒருத்தன் ஓடி வந்து… “ராயா துரை அண்ணன… அதாங்க பெரிய டான யாரோ சம்பவம் பன்னிட்டாங்களாம்… உஷாரா இருந்துக்கப்பான்னு” சொல்லிட்டு ஓட…
படம் பாக்குற நம்ப… ஏண்டா ஏன்… அப்படின்னு காண்டாக…
இப்ப மறுபடியும் கதையில குட்டி டான் எஸ்.ஜே.சூர்யா ரொம்ப குழம்பி போறார்… பின்ன இருக்காதா… அவர் போடப் பிளான் போட்ட பெரிய டானை யாரோ போட்ட செய்தி வந்தா….
யாரா இருக்கும்னு ஆள்வச்சி எப்படியோ அது ராயந்தான்னு கண்டு புடிச்சிக்கிறார்… இப்ப ராயன வீட்டுக்கு கூப்பிட்டு சேத்துக்க டிரை பன்னா ராயன் “ அட அது நா இல்லீங்க…”ன்னு சொல்லிட்டு கெத்தா வெளிய போக… குட்டி டான் வெத்தா அடுத்து என்னடா செய்யன்னு மண்டை பிச்சிக்கிறார்…
ராயனோ ஒன்னுமே நடக்காத மாதிரி பாஸ்ட்புட் கடையில சிக்கன் ரைஸ் போட…
இப்ப கதை ஏதாவது புரியுதா…
சரி வாங்க மிச்சத்தையும் சொல்றேன்…… ஆனா கிளைமாக்சை மட்டும் சொல்ல மாட்டேன்…. சரியா…
இதுக்கு இடையிலயே குட்டி டானுக்கு ஒரு பொண்டாட்டி, ஒரு ஆசை நாயகின்னு ஒரு டிராக் ஓட… பொண்டாட்டி வரலட்சுமிக்கும் குட்டி டான் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அடிக்கடி குடும்ப சண்டை வேற…
இன்னொரு டிராக் அந்த ஏரியாவுக்கு புதுசா வந்த போலீஸ் ஆபீசர் பிரகாஷ் ராஜுக்கு எப்படியாவது இந்த 2 டான் கோஷ்டியையும் ஒழிச்சிடனும்னு தனி பிளான் போட்டூகிட்டே இருக்கார்… அதுக்காக ஒரு டம்மி மோதலை செட் பன்றார்…
இப்படி ரணகளமா போகும் போது ராயனோ எப்படியாவது தங்கச்சிக்கு கல்யாணம் பன்னி வைச்சிடனும்னு மாப்ளை பையன பாத்து கல்யாணத்துக்கு நாளும் குறிச்சிடுறாங்க…
குட்டி டானை போட ராயன் கிளம்ப இன்னோரு பக்கம் ராயனுக்கு அடைக்கலம் குட்டுத செல்வராகவன் ஊர் நடுவுல கயித்துல தொங்க… அதுவரைக்கும் அவ்ளோ கொலையும் குத்தும் நடக்கும் போது வராத போலீசு திடீர்னு வந்து ராயனை கொத்தா அள்ளிகிட்டு போகுது…
இதுக்கிடையில பெரிய தம்பி கல்யாணம் பண்ணிக்காமலேயே அபர்ணா பால முரளியோட லவ்வு… கசமுசான்னு புள்ளயும் உண்டாயிடுது…
விடிஞ்சா கல்யாணம்… போலிஸ்ல மாட்ன ராயன் வந்தானா… குட்டி டான் இன்னா ஆனார்… பெரிய தம்பி, சின்னா தம்பி கதை இன்னா… தங்கச்சி கல்யாணம் நாடந்துச்சா? இதெல்லாத்துக்கும் கிளைமாக்ஸ் விடை சொல்லுது…
அப்பாடா ஒருவழியா கதைன்னு ஒன்ன சொல்லியாச்சி…
ஆமா… பட்த்துல வந்த காட்சியில இருந்து கிளைமாக்ஸ்வரைக்கும் மொட்ட்த்தலையோட எதையோ பறிகுடுத்த மாதிரி மூஞ்சி பூரா சோகத்தோட ஏன் ராயன இயக்குனர் தனுஷ் அலைய விட்டாருன்னு படாம் பாத்த யாருக்கும் புரியல… பட்த்தோட ஹீரோ ராயன் கேரக்டர்லயே தெளிவில்லாம போனதால நிறைய கேரக்டரு என்ன ஆனாங்கன்னு கண்டுபுடிக்க முடியல…
ஆக்ஷன் எல்லாம் அதிரடிதான்… ஆனா ஏன் இவ்ளோ ரத்த வெறி… மருந்துக்கு கூட லாஜிக் இல்ல…
ஆரம்பத்துல அடைக்கலம் குடுத்த செல்வராகவன் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி ரிவன்ஞ் எடுப்பார்னு பாத்து ஏமாற அவர தொங்க வுட்டாச்சி…
ராயலா பெரிய டானா வலம் வந்த சரவணனும் பொசுக்குனு போயிடுறாரு….
சரி கழுத குட்டி டானாவது நின்னு ஆடுவார்னு பாத்தா அவரும் அம்போ…
அப்ப தம்பிகளோட மெகா டானா ராயன் மாறிட்டாரான்னு பாத்தா… கையில குழந்தையோட தங்கச்சிய கூட்டிகிட்டு கிளம்பிடுறாரு… படம் தொடங்கும் போது பிளாக் அண்ட் வைட்ல லாரில வந்தாரே அதே மாதிரி…
அப்ப என்ன தான்யா சொல்ல வறீங்க… கேக்குறது புரியுது… கன்றாவி அது தெரிஞ்சிருந்தா சொல்லி இருக்க மாட்டோமா…
ஏ ஆர் ரகுமான் ஒருத்தர்தான் இசைய போட்டு போட்டு பட்த்த தள்ளிகிட்டே வராரு…
மொத்த்த்துல நல்லா நடிக்குற ஏராளமான நட்சந்திரங்கள் இருந்தும் ராயனுக்கு மட்டும் கவனம் செலுத்திகிட்டாரு இயக்குனர் தனுஷ்.
இப்ப மறுபடியும் தலைப்பு…
”ரத்த வாடை”… இயக்குனராக ஜெயிக்க நடிகரை தொலைத்த ராயன்!
கோடங்கி
மதிப்பு – 2.5/5 (ஒளிப்பதிவுக்கும்,இசைக்கும் மட்டும்…)
