‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி - வசிஷ்டா (Vassishta) - எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) - கூட்டணியில் உருவாகும் 'விஸ்வம்பரா ' படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் 'விஸ்வம்பரா ' படத்தின் தயாரிப்பாளர்கள்- ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி - ...









