செக்கச் சிவந்த வானம் – முக்கிய தகவலை வெளியிட்ட அரவிந்த்சாமி
மணிரத்னம் தற்போது முன்னணி நட்சத்திரங்களை வைத்து `செக்கச் சிவந்த வானம்' படத்தை இயக்கி வருகிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் நடிகர்கள் 4 பேர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், அரவிந்த்சாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,
`செக்கச் சிவந்த வானம் படத்தில் எனது காட்சிகளை முடித்துவிட்டேன், மணி சார் மற்றும் அவரது குழுவுடன் பணியாற்றுவது எப்போதுமே மிகச்சிறந்த அனுபவம் தான். இதில் `செக்கச் சிவந்த வானம்' படம் கொஞ்சம் ஸ்பெஷலானது, என்பதை உணர முடிகிறது. ஒரு சிறய இடைவேளைக்குப் பிறகு, வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் `பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தின் புரமோஷனில் பங்கேற்க உள்ளேன்' என்று குறிப்ப...









