சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் ‘பஞ்சராக்ஷ்ரம்’
இயற்கைக்கு அப்பாற்பட்ட சாகசம் நிறைந்த திரில்லர் படமாக உருவாகும் 'பஞ்சராக்ஷ்ரம்'
இயற்கைக்கு அப்பாற்பட்ட பல த்ரில்லர் படங்கள் தயாரிக்கப்பட்டு அவ்வப்பொழுது வெளியிடப்படுகின்றது. ஆனால், அவை வேறுபட்ட திரைப்படங்களாக இல்லாமல் ஒரே மாதிரியாக வழக்கமான திகில் படங்களாகவே இருக்கிறது. உண்மையில், ‘சூப்பர்நேச்சுரல்’ மற்றும் ‘ஹாரர்’ வகைக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிறந்த எடுத்துக்காட்டு படமாக 'பஞ்சராக்ஷ்ரம்' சூப்பர்நேச்சுரல் - சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும். பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸிற்காக வைரமுத்து தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வைரமுத்து இயக்குகிறார். 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்', 'சந்திரமௌலி' மற்றும் 'பொது நலம் கருதி' போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தனக்கு ஒரு நல்ல வரவேற்பை உருவாக்கிய நடிகர் சந்தோஷ் பிரதாப், இ...









