புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!

ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் விக்ரமின் ‘மகான்'! நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘மகான்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜகமே த...
நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா!

நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு – எஸ்.ஜே.சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு - எஸ்.ஜே.சூர்யா! நல்ல வித்தியாசமான படைப்புகளைக் கொடுக்கக்கூடிய இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா. சில ஆண்டுகளாகவே அவர் எந்த ஒரு படத்தையும் எடுக்கவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிம்புவுடன் எஸ்.ஜே.சூர்யா நடித்த மாநாடு படம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியாக இருக்கிறது. இதில் காவல்துறை அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. சமீபத்தில் இதன் டப்பிங் வேலைகளை முடித்த அவர் தனது மகிழ்ச்சியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், 8 நாள் மாநாடு டப்பிங் வேலையை 5 நாளில் முடித்தேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை எல்லாம் போச்சு. குறைந்தது 10 நாள் ஓய்வு வேண்டும் என்று எல்லா அவயங்களும் கெஞ்சுகின்றன. ஆனால், கடைசி அவுட்புட்டை பார்த்த பிறகு, உங்கள் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிருக...
சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் புகார்!

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் புகார்! பட அதிபர் மைக்கேல் ராயப்பன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த திரைப்படம் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து, இந்த படத்தை இத்துடன் ரிலீஸ் செய்து விடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் உறுதியளித்தார். எனவே நான் அந்த படத்தை வெளியிட்டேன். படம் சரியாக ஓடாததால் எனக்கு ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னால் அடுத்த திரைப்படம் தயாரிக்க முடியவில்லை. அதேநேரம் சிம்பு தரப்பில், தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றா...
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்! ’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்....
குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு... சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், ...
‘பிக்பாஸ் 5’ அப்டேட் – இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்!

‘பிக்பாஸ் 5’ அப்டேட் – இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘பிக்பாஸ் 5’ அப்டேட் - இந்த வாரம் எலிமினேட் ஆனது இவர் தான்! பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 10 பெண்கள், 7 ஆண்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதில் நமீதா மாரிமுத்து, முதல் வார இறுதியில் மருத்துவ காரணங்களுக்காக வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி கடந்த வாரம் நதியா சங் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அபிஷேக் ராஜா, குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக வெளியேற்றப்பட...
‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘ஜெயில்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்! ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்த பாலன். இதையடுத்து இவர் இயக்கிய ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் இயக்கிய வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து இவர் இயக்கத்தில் உருவான படம் ஜெயில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒருசில காரணங்களால் இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் முடங்கி உள்ளது. இந்நிலையில், ஜெயில் படத்தின் முக்கிய அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர். விர...
திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா.... அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா? கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம் டோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகிறார்கள். இதனால் நடிகை சமந்தா மன அழுத்தத்தில் இருக்கிறாராம். இந்நிலையில், மன அழுத்தத்தை போக்க, நடிகை சமந்தா தனது தோழியுடன் இணைந்து ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளார். பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பிய பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளாராம். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது மேலும் ...
நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்! பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அவர், தற்போது நடிகையாக அறிமுகமாக உள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபத...
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி!

படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு…. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
படப்பிடிப்பில் துப்பாக்கிச் சூடு.... நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி! ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ரஸ்ட்’. இப்படத்தின் படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் நடிகர் அலெக் பால்ட்வின் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். மேலும் இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அடுத்து ‘ரஸ்ட்’ திரைப்படத்தின் படப்பி...