புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

அமேசான் ப்ரைமில் ஜனவரி 29-ம் தேதி வெளியாகிறது மாஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அமேசான் ப்ரைமில் வெளியாகிறது மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள சிறுவர்களை தவறான செயல்களில் ஈடுபடுத்தும் விஜய் சேதுபதியுடன் விஜய் மோதி, சிறுவர்களை மீட்பது போன்று கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் பொங்கல் படத்தை முன்னிட்டு கடந்த 13 ஆம் தேதி வெளியானது. கடந்த 9 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் தியேட்டரில் குவிந்தனர். இந்த படம் கடந்த 14 நாட்களில் சுமார் 72 கோடி வசூலை வாரி குவித்துள்ளதாக கூறப்படுகிறது இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 29-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.படத்திற்கு முதலீடு செய்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் லாபம் பெற்றுள்ள ந...
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்!

சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
சூர்யா தயாரிக்கும் படத்தில் தனது மகன் ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக  நடிக்கும் அருண் விஜய்! நடிகர் விஜய்குமார் அவர்களின் பேரனும் நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய ஆர்ணவ் விஜய், பிரபல நடிகர் சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், எனும் செய்தி வெளியாகியதிலிருந்தே, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய மிகப்பெரும் ஆச்சர்யம் யாதெனில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார் என்பது தான். இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது... இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் விளம்பரத்திற்காகவும், ஆர்ணவ் விஜய்க்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என  முதலிலேயே கூறிவிட்டார். நான் த...
S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை!

S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CB CID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக மிகவும் மிரட்டலான கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். ஓய்வு பெற்ற வழக்கறிஞராக S.A.சந்திரசேகரரும், அழுத்தமான அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிகை ரோகிணியும், ராணுவ அதிகார...
இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபுவின் பொம்மை நாயகி!

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபுவின் பொம்மை நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு. தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் "நீலம் புரடொக்‌ஷன்ஸ்" ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் தொடர்ந்து "ரைட்டர்" படம் தயாரிப்பில் இருக்கும் நிலையில், தற்போது யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படத்தை, யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது நீலம் புரடொக்‌ஷன்ஸ். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷான் இயக்குகிறார். 'பொம்மைநாயகி' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியிருக்கிறது. யோகிபாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி,எம் குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன். உள்ளிட்ட பலர் நடிக்கிறார்...
விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ்!

விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்* தமிழ் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரமும், பிரலபலமான முகங்களில் ஒருவருமான விஜய் சேதுபதி, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகரின் 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப்போகும் மவுனத் திரைப்படம் இது. இந்தப் படத்தைப் பற்றி பேசியிருக்கும் இயக்குநர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை 'காந்தி டாக்ஸ்' மூலம் நனவாக்கியது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானா' என்கிற திரைப்படமே பாலிவுட்டில் கடைசியாக உருவான மவு...
கே.ஜி.எப்.-2ல் அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – யஷ்சுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

கே.ஜி.எப்.-2ல் அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் – யஷ்சுக்கு கர்நாடக அரசு நோட்டீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப்.-2ல் அந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும் - யஷ்சுக்கு கர்நாடக  அரசு நோட்டீஸ் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் யஷ். இவர், நடித்துள்ள .கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசரில் நடிகர் யஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் யஷ்சுக்கு, கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டு இருப்பதாவது:- கே.ஜி.எப்-2 திரைப்படத்தின் டீசர் கடந்த 7-ந் தேதி வெளியாகி உள்ளது. அந்த டீசரில் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சி மற்றும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. புகைப்பிடிப்பது, புகையிலையை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த விதி கே.ஜி.எப்.-2 டீசரில் மீறப்பட்டுள்ளது. அந்த காட்சியை...
தனுஷ் – செல்வராகவன்-தாணு கூட்டணி படத்தின் தலைப்பு!

தனுஷ் – செல்வராகவன்-தாணு கூட்டணி படத்தின் தலைப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை இன்று வெளியிட இருப்பதாக அறிவித்தார்கள். அதன் படி, படத்திற்கு ‘நானே வருவேன்’ என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது...
பொங்கலன்று சிம்புவின் மாநாடு மோஷன் போஸ்டர் படக்குழு அறிவிப்பு

பொங்கலன்று சிம்புவின் மாநாடு மோஷன் போஸ்டர் படக்குழு அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் மோஷன் போஸ்டரை வருகிற ஜனவரி 14 பொங்கலன்று மாலை 4.05 மணிக்கு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படக்குழுவின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. அதே தினத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்...
மாஸ்டர் கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள் – லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் கசிந்த காட்சிகளை தயவுசெய்து பகிராதீர்கள் – லோகேஷ் கனகராஜ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் நாளை மறுதினம் உலகமெங்கும் வெளியாகவுள்ள திரைப்படம் 'மாஸ்டர்'. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் கொரோனா காரணமாக சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவரும் இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. வாட்ஸ்அப் உட்பட பல சமூக வலைதளங்களிலும் அவை பரப்பப்பட்டு வருகின்றன. இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம், வெளியாக  ஒரு நாளே இருக்கும் இந்த வேளையில் இப்படிப் படத்தின் காட்சிகள் வெளியாகியிருப்பது படக்குழு மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. Lokesh Kanagaraj @Dir_Lokesh Dear all It's been a 1.5 year long struggle to bring Master to u. All we have...