புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா… கேரளாவில் பரபரப்பு

கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா… கேரளாவில் பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  *கிணற்றுக்குள் விழுந்தார் நமீதா... கேரளாவில் பரபரப்பு*   பிரபல நடிகை நமீதா கிணற்றுக்குள் தவறி விழுந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை நமீதா முதன் முறையாக தயாரிக்கும் "பெளவ் வெளவ்" படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தயாரிப்பதோடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் நமீதா. படப்பிடிப்பு காட்டுப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகில் நடந்து கொண்டிருந்த போது, நமீதாவின் மொபைல் தவறி கிணற்றுக்குள் விழுந்தது. கிணற்றுக்குள் மொபைல் விழுவதைக் கண்டு பதட்டத்தில் அதைப் பிடிக்க முயற்சி செய்த நமீதாவும் கிணற்றுக்குள் விழுந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் பதறிய போது, "கட் கட் சூப்பர்" என கை தட்டினர், இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி & மேத்யூ ஸ்கேரியா. இந்த செய்தியை உண்மை என்று நம்பிய மக்கள்...
மூன்று மொழிகளில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’

மூன்று மொழிகளில் கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் ‘டிரைவர் ஜமுனா’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை  களத்தில் 'டிரைவர் ஜமுனா' - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது! இயக்குநர்கள்  நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும்  மிகப்  பெரிய வெற்றி அடையும். தற்போது தமிழ், தெலுங்கு என தனக்கு வரும் கதாபாத்திரங்களுக்காக மெனக்கிட்டு, திரையில் உயிரூட்டி வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவருடைய திரையுலக பயணத்தைத் தொடக்கம் முதல் பார்த்தவர்கள், அவருடைய வெற்றிக்குப் பின்னால் எப்படியொரு கடின உழைப்பு மறைந்துள்ளது என்பதை அறிவார்கள். இன்று ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளாகும். அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரசிகர்களும் பிறந்த நாளுக்கான பிரத்தியேக போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள். இந...
மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்! விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. அதனால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் படத்தின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது ஏற்கனவே 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்ற...
கட்டுப்படுத்தப்பட வேண்டுமா டிக்கெட் விலை – அரவிந்த் சாமி டுவிட்

கட்டுப்படுத்தப்பட வேண்டுமா டிக்கெட் விலை – அரவிந்த் சாமி டுவிட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட் விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில், வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர். டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி. இது தொடர்பாகத் தனது டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: "வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எ...
சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சாக்‌ஷி அகர்வால் வெளியிட்ட அரண்மனை 3 பட அப்டேட்! சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் வருகின்றனர். இப்படத்திற்கு சத்யா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குஜாரத்தில் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே தடைபட்டது. இந்நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது நடிகை சாக்‌ஷி அகர்வால் இப்படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டதாக கூற...
நீ அசுரனா… நான் ஈஸ்வரன்…. என்று  வசனம் பேசிய சிம்பு! 

நீ அசுரனா… நான் ஈஸ்வரன்…. என்று  வசனம் பேசிய சிம்பு! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று  வசனம் பேசிய சிம்பு! சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி இருக்கும் இந்த திரைப்படம் கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆகஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது. இதில் சிம்பு நீ அசுரனா... நான் ஈஸ்வரன்.... என்று சிம்பு பேசும் வசனம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது....
வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

வெளியாகிய மாஸ்டர் 3 வது புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாஸ்டர்  3 வது புரோமோ வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளதால் ஏற்கனமே சிட்டி ஸ்டோரி, பாடல் வெளியாகி வைரலான நிலையில், இன்று மாலை 7 மணிக்கு மாஸ்டர் ரெய்ட் பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்தனர். மேலும், விஜய்யின் மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் சில்நாட்களுக்கு முன் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்பாடலின் வீடியோ பிரமோவை படக்குழு வெளியிட்டது. அதேபோல் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் 2 வது வீடியோ புரோமோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது இப்படத்தயாரிப்பு நிறுவனம். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்தில் அவரது குரலைக் கேட்டு உற்சாகமடைந்துள்ளனர். சென்ற வருடத்தில் அவரது படம் எதுவும் கொரொனா கால ஊரடங்கினால் ரிலீசாகாத நிலையில...
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
தனுஷ் படத்தில் முக்கிய வேடத்தில் ஸ்ம்ருதி வெங்கட்! ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . தற்போது இவர் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தனுஷின் 43-வது படத்தை அவர் இயக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடிக்கிறார்.இந்த படத்தில் வசனங்கள் மற்றும் கூடுதல் திரைக்கதைக்காக பாடலாசிரியர் விவேக் சமீபத்தில் இணைந்தார். தற்போது இந்த படத்தில் தடம்,மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்திய ஸ்ம்ருதி வெங்கட் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
இணையத்தை தெறிக்க விடும் விஜய்யின் மாஸ் வசனங்களுடன் மாஸ்டர் செகண்ட் புரோமோ தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் செகண்ட் புரோமோ வெளியாகியுள்ளது .   https://twitter.com/Jagadishbliss/status/1346796208568770565?s=20 தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனான வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்தப் படத்தை பார்க்க ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மிகுந்த ஆவலில் உள்ளனர். இந்நிலையில் இன்று விஜய்யின் மாஸ் வசனங்களுடன் செகண்ட் புரோமோ இணையத்தை தெறிக்க விடுகிறது. அதில் ‘இதுக்கு முன்னாடி இங்க வந்த வங்கலாம் உயிர் பயத்தால ஓடிப்போய்ருக்கலாம் ஆன...
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வெற்றிமாறன்- சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்தில் முதியவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி! ஜெயமோகன் எழுதிய துணைவன் எனும் சிறுகதையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார். அந்த படத்தில் சூரி தான் ஹீரோ. வெற்றிமாறன், சூரி கூட்டணி சேர்ந்துள்ள படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவர் ஏற்கனவே அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார் வெற்றிமாறன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிப்பதாக இருந்தது. ஆனால் குளிர் அதிகம் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருவதால் பாரதிராஜாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறி விலகிவிட்டார். பாரதிராஜா விலகிய பிறகு கிஷோரை ஒப்பந்தம் செய்தார் வெற்றிமாறன். ஆனால் அவரும் படத்தில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில் பாரதிராஜா நடிப்பதாக இருந்த முதிய...