ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகையில் வெளியானது. அடுத்து புதிய படத்தில் நடிக்க பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். நெல்சன் திலீப்குமார் சொன்ன கதை பிடித்ததால் அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இது அவருக்கு 169-வது படம். நெல்சன் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அதிரடி குடும்ப கதையம்சம் உள்ள படமாக தயாராவதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை ஆகஸ்டு மாதம் தொடங்கி பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகை தேர்வு நடந்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் பெயர் அடிபடுகிறது. ஐஸ்வர்யாராய் ஏற்கனவே எந்திரன் படத்தில் ரஜினியுடன் நட...
அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய திரைப்படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்திருந்த இப்படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரசிகர்கள், அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் நடனமாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அச்சமயத்தில் கோவை காந்திபுரத்தில் உள்ள கங்கா யமுனா காவேரி என்ற திரையரங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடினர்.
இதில் இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்திருந்தது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், குடிபோதையில் ரசிகர்களிடம் தகராறில் ஈடுபட்டதை தட்டி கேட்டதால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக...
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 'கே.ஜி.எப்-2' டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
https://twitter.com/prashanth_neel/status/1499263301523423232?ref_src=twsrc%5Etfw%...
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் நாளை(04.03.2022) காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அவர்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்....
கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ்.
ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ஆரவ், சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.
தற்போது இவரது நடிப்பில் ராஜபீமா என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் ‘வா மணவாளா..’ என்ற ஆல்பம் சாங் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில், ஆரவ் சிக்ஸ் பேக் தோற்றத்திற்கு மாறியிருக்கிறார்.
இதற்காக 6 ஆறுமாத காலமாக கடின உழைப்பையும், அர்ப்பணிப்பும் செய்திருக்கிறார்.
ஆரவ் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கலக்கிய வடிவேலுவுக்கு வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.
தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
சுராஜ் இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார்.
மேலும் வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தது மிகவும் சந்தோஷம் என்று ஷிவானி பதிவு செய்திருக்கிறார்....
கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான
மணி ரத்னம் இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத் திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது.
இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”
2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை “பொன்னியின் செல்வன்”. இது அனைவரும் அறிந்ததே.
இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சோழப் பேரரசின் பொற்காலம் துவங்கும் இந்தக் கால கட்டத்தைத் திரைக்கு...
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’.
நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமானது.
அதன்பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் 110 நாள் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளத...
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'.
இந்தப் படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, வினய் ராய், இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.
கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கழித்து என்னுடைய படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
நாம கொண்டாடிகிட்டு இருக்குற ...