உமாபதி ராமையா இயக்கத்தில் கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவக்கம்!
உமாபதி ராமையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்;
கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவக்கம்;
மீண்டும் இணையும் தம்பி ராமையா மற்றும் உமாபதி ராமையா கூட்டணி;
OTT தளத்தில் சிறந்த வரவேற்ப்பை பெற்ற “ராஜா கிளி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, சிறந்த வரவேற்பைப் பெற்ற நடிகர் மற்றும் இயக்குனர் உமாபதி ராமையா, தற்போது தம்பி ராமையாவுடன் இணைந்து தனது இரண்டாவது படைப்பை இயக்குகிறார். கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படம், இன்று (அக்டோபர் 3, 2025) பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
Production No.6 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், அரசியல் திரைப்படமாக உருவாகவிருக்கிறது. அதிலும் நகைச்சுவை, பொழுதுபோக்கு கலந்த படைப்பாக ரசிகர்களைக் கவரவுள்ளது.
இப...









