திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

MOVIES

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் “சண்டக்காரி த பாஸ்”..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விமல் ஜோடியாக ஸ்ரேயாவின் "சண்டக்காரி த பாஸ்"..! ஜெயகுமார் தயாரிப்பில் உருவாகும் படம் "சண்டகாரி - தி பாஸ்”. இந்த படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ”மை பாஸ்” என்ற படத்தை தழுவி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நியூயார்க், வெனிஸ், லண்டன் போன்ற இடங்களில் நடந்து முடிந்தது. அடுத்த கட்டமாக கொச்சின், கோவா, காரைக்குடி போன்ற இடங்களிலும் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆக்‌ஷன் காமெடியாக இந்த படம் உருவாகி வருகிறது....
விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் நடிக்கும் த்ரில்லர் திகில் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை..! டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’விக்ரம்-58’  படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தை தொடங்குவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் தெலுங்கு இந்தி என 3 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது....
கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்ட சாதனை பயணம் பட பாடல்கள்..!

கவிஞர் முத்துலிங்கம் வெளியிட்ட சாதனை பயணம் பட பாடல்கள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  முதல் படத்திலேயே கலக்கல் ஸ்டார் பட்டத்தை பெற்ற ‘சாதனை பயணம்’ ஹீரோ பரமேஸ்வரர் நடிகர்களின் நடிப்பு திறமையையும், மக்களிடம் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும் பொருத்தே சினிமாவில் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் என்று பல முன்னணி நட்சத்திரங்களின் பெயர்களுக்கு முன்னால் இப்படி தான் பட்டங்கள் சேர்ந்தாலும், தற்போது கோடம்பாக்கத்தில் உதிக்கும் சில திடீர் ஸ்டார்கள் வரும்போதே, பட்டத்துடனேயே வருகிறார்கள். பவர்ஸ் ஸ்டார், பப்ளிக் ஸ்டார், வின் ஸ்டார் என்று மாதம் ஒரு ஸ்டார்கள் கோடம்ப்பாக்கத்தில் அவதரித்தாலும், இவர்களில் திறமை இருப்பவர்கள் நிரந்தர ஸ்டாராக மக்கள் மனதில் நின்றுவிடுகிறார்கள். அந்த வரிசையில், புதிதாக தமிழ் சினிமாவில் அவதரித்திருப்பவர் ‘கலக்கல் ஸ்டார்’ பரமேஸ்வரர். சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தினாலும், ஆசைய...
விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  விக்ரம் படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு..! அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரமின் 58-வது படமாக உருவாகும் புதுப்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் நிறுவனமும் இணைந்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விக்ரமின் 58-வது படத்தில் நடிக்க விருப்பமுள்ள மற்றும் நடிப்பில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து வயதினர்களும் இமெயில் மூலம் புகைப்படங்களையும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் அனுப்புமாறு பதிவிட்டுள்ளார். விக்ரம் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீசுக்கு ரெடியான நிலையில் தனது அடுத்த பட அ...
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் அர்ஜுன்..! விஜய் ஆண்டனியின் கொலைகாரனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் இணைகிறார் அர்ஜுன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். அவர் தற்போது கார்த்தி நடித்து முடித்துள்ள 'கைதி' படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை கவனித்து கொண்டே விஜய் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளையும் கவனித்து வருகிறார். விஜய்-லோகேஷ் இணையும் இந்த படத்தில் ராஷிகண்ணா மற்றும் ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கவுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டர் ஹீரோவுக்கு இணையான வலுவான கேரக்டர் என்பதால்...
அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    அஜீத் படத்தில் நைட் கிளப் ஆங்கில பாடல்..! அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ’நேர்கொண்ட பார்வை’ படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானின் இருள்’ பாடல் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து தற்போது ‘காலம்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் இசையில் இந்தப் பாடலை நாகார்ஜுன், யோன்ஹோ ஆகியோர் இணைந்து எழுத அலிஷா தாமஸ், யோன்ஹோ பாடியுள்ளனர். ’கவலை வேண்டாமே என் தோழா’ என தொடங்கும் இந்த பாடலில் ராப் இசைக்கு ஏற்ப ஆங்கிலத்திலும் வரிகள் இடம்பெற்றுள்ளன. நைட் கிளப்பில் இடம்பெறும் வகையில் இந்த பாடல் வரிகள் உள்ளன. இந்த படம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது....
ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும் “கோமாளி”.!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஆகஸ்ட் 15ம் தேதியில் ரசிகர்கள் பார்வைக்கு வரும்..! அடங்கமறு' வெற்றிப் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோமாளி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் நடித்திருக்கிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது....
கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கொல்கத்தா சர்வதேச விருது விழாவில் தேர்வான உதயநிதி படம்..! சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில், "தாதாசாகெப் சர்வதேச மும்பை திரைப்பட விழாவிற்கு பிறகு கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் விருது பெறுகிறது"...
பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  பட தயாரிப்பில் இறங்க முடிவு செய்த ஹீரோயின்..! தமிழில் ‘காபி’, மலையாளத்தில் மம்முட்டியுடன் வரலாற்று படமான ‘மாமாங்கம்’, பிரித்விராஜின் சகோதரர் இந்திரஜித்துடன் ‘தாக்கோல்’ மற்றும் கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘துரோணா’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இசை, நடனம் மீது தீராத காதல் கொண்டவர் இனியா. ‘மியா’ என்கிற வீடியோ இசை ஆல்பத்தை சொந்தமாக தயாரித்துள்ளார். சர்வதேச நடனப்போட்டியில் கலந்து கொள்வதற்கு திறமை இருந்தும் தயங்கி நிற்கும் ஒரு பெண்ணிற்கு, எதிர்பாராமல் ஒரு இளைஞன் நடன குருவாக வந்து முறையாக நடனத்தை கற்று கொடுத்து அவரை வெற்றிபெற செய்கிறான். இதுதான் இந்த வீடியோ ஆல்பத்தின் கான்செப்ட். நடனம் கற்றுக் கொள்ளும் மியா என்கிற பெண்ணாக இனியா நடித்துள்ளார். இதுபற்றி இனியா கூறும்போது, ‘நான் ஒரு டான்சர். என்றாலும் இதுவரை நிறைய மேடைகளில் தான் ஆடியிருக்கிறேன். ஆனால் ம...
மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மீண்டும் மலையாள சினிமாவில் நயன்தாரா நடித்த பட டிசைன் வெளியிட்ட ஹீரோ..! மலையாளத்தில் நயன்தாரா சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடித்துள்ள படத்தின் புகைப்படத்தை நிவின் பாலி வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என வர்ணிக்கப்படும் நயன்தாரா முதல் முதலில் அறிமுகமானது மலையாளத்தில்தான். ஆனால் தமிழில் பிரபலமானவுடன் மலையாளத்தில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார். அதிலும் மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியதும் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தினார். நீண்ட இடைவெளிக்குப் பின் அவர் மீண்டும் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நிவின் பாலி தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்...