காந்தாராவை துரத்தும் சோகம்!
கன்னட திரை உலகில் பிரபல நடிகரான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து காந்தாரா 2-ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. காந்தாரா 2ம் பாகம் ஆரம்பித்தது முதலே அடுத்தடுத்து 3 பேருக்கு நடந்த நிகழ்வு, படக்குழுவினரை ஆடிப்போக வைத்துள்ளது.
இது ஒரு புறம் எனில் கர்நாடகாவின் மாணி அணையில் படகு கவிழ்ந்தது. இதில் நடிகர் ரிஷப் ஷெட்டி உள்பட 30 பேர் தண்ணீரில் விழுந்தனர். நல்ல வேளையாக அனைவரும் உயிர் தப்பினர்.
ஏற்கனவே படத்தில் நடித்த 3 நடிகர்கள், கடந்த ஒன்றரை மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்ததால், இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணைப் பகுதியில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறவில்லை என தெரிய வந்துள்ளது. படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்....









