தீபாவளி தினத்தில் பட்டாசாக வெடிக்கப்போகும் தல அஜீத்தின் ‘விஸ்வாசம்’ டீசர்
தல அஜீத் நடித்து வரும் விஸ்வாசம் படத்தின் ஒவ்வொரு தகவல்களும் சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக அஜீத் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே இருக்கிறது. விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் மும்பையில் முடிந்து விட்டது என்றும் படத்தின் அடுத்தகட்டமாக மெருகேற்றும் பணிகள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், படத்தின் இரண்டாம் முன்னோட்ட போஸ்டர் நாளை 25ம்தேதி காலையில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தல ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர். அதோடு, வரும் புத்தாண்டில் பொங்கல் தினத்தில் தல பொங்கலாக கொண்டாடும் விதமாக விஸ்வாசம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது.
மேலும், ரசிகர்களை சந்தோஷப்படுத்த லட்சம் வாலா வெடியாக தீபாவளி தினத்தில் விஸ்வாசம் படத்தின் ஸ்பெஷல் டீசர் ஒன்றும் ரிலீஸ் ஆக இருக்கிறதாம். இதற்கான அனைத்து பணிகளும் முடிந்து டீசர...









