வெள்ளிக்கிழமை, நவம்பர் 20
Shadow

MOVIES

விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி படத்தில் "குக் வித் கோமாளி" புகழ்! சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சந்தானத்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் புகழ், பிசியான நடிகராக வலம்வருகிறார்.  ...
முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதன்முறையாக லிங்குசாமி படத்திற்கு இசையமைக்கும் தேவிஸ்ரீபிரசாத் தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாக உள்ளது. இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார் இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியின் போது இதனை உறுதிப்படுத்தினார். இயக்குனர் லிங்குசாமியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைந்து பணியாற்றுவது இதுவே மு...
சிம்பு பாடியுள்ள விஜய் சேதுபதி படம்!

சிம்பு பாடியுள்ள விஜய் சேதுபதி படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, நடிகர்கள்
  அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். விவேக், மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘முருகா’ எனும் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலை பாடியது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுல்தான் படத்திற்காக நடிகர் சிம்பு பாடிய ‘யாரையும் இவ்ளோ அழகா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் இடம்பெறும் ‘முருகா’ பாடல் மீதான எதிர...
மணாலியில் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்!

மணாலியில் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மணாலியில் லெஜண்ட் சரவணன் ரொமான்ஸ்! தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் லெஜண்ட் சரவணன், நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கும் ரொமாண்டிக் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் லெஜண்ட் சரவணன் நடித்த ...
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ 

ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, செய்திகள்
ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘பாகுபலி 3’ ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த படம் பாகுபலி. இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2017-ல் வெளியான பாகுபலி படத்தின் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இந்த இரண்டு பாகங்களும் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய திரையுலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், பாகுபலி படத்தின் 3-ம் பாகத்தை இயக்க ராஜமவுலி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளுக்கு பதிலாக ஓ.டி.டி. தளத்தில் நேரடியாக வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகுபலி 3-ம் பாகத்தை ரூ.200 கோடி பட்ஜெட்டில் 9 தொடர்களாக எடுக்க முடிவு செய்துள்ளார்களாம். இதனை திரைப்பட...
மீண்டும் தொடங்கி உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு

மீண்டும் தொடங்கி உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
மீண்டும் தொடங்கி உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, படத்தில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர். ரஜினி உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினர். இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். ஒரு மாதம் சென்னையில் படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம...
வலிமை அப்டேட் வந்தாச்சு….

வலிமை அப்டேட் வந்தாச்சு….

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை அப்டேட் வந்தாச்சு.... அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது....
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சுந்தர்.சி தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி பெற்றவர் சுந்தர்.சி. இவர் பல படங்களில் நாயகனாகவும் நடித்திருக்கிறார். தற்போது மீண்டும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை கட்டப்பாவ காணோம் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் மணி செயோன் இயக்குகிறார். வி.ஆர்.டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கும் இப்படம் கிரைம் டிராமாவாக உருவாக இருக்கிறது. இதில் சுந்தர்.சி.யுடன் ஹெபா படேல், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது...
ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை!

ஆஸ்கர் விருது பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், திரைப்படங்கள்
ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின் இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம்பெறவில்லை! சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இதனிடையே ஆஸ்கர் விருதின் பொதுப்பிரிவுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. பின்னர் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற 366 திரைப்படங்களின் பட்டியலிலும் ‘சூரரைப்போற்று’ திரைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் இப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படங்களின...
அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

அன்பிற்கினியாள் – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, விமர்சனம்
  மலையாளத்தில் இருந்து தமிழுக்கு ரீமேக் ஆகி வந்துள்ள அன்பிற்கினியாள் தமிழில் புது கான்செப்ட். மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து ஹிட் அடித்த படம் ஹெலன். இந்த படத்தை தமிழில் அன்பிற்கினியாள் ஆக மாறியுள்ளது. அப்பா - மகள் பாச கதை எந்த மொழிக்கும் பொருந்தக் கூடியது. அதைப் போல ஒரிஜனல் ஹெலன் திரைக்கதைக்கு எந்த சேதமும் இல்லாமல் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கோகுல்.   இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களை இயக்கிய கோகுல் இந்த படத்திற்காக பெருசாக எதையும் மெனக்கெடவில்லை. அதே நேரம் ஒரிஜினல் கதையில் இருந்த விறுவிறுப்பை கொஞ்சமும் குறையாமல் கொடுத்திருக்கிறார் கோகுல். ரீல் அப்பா-மகள் கதையாக இல்லாமல் இது ரியல் அப்பா அருண்பாண்டியன், மகள் கீர்த்தி பாண்டியன் இந்த படத்திலும் அப்பா மகளாக நடித்திருக்கிறார்கள். கதைப்படி அப்பா அருண்பாண்டியன், எல்ஐசி ஏஜன்டாக இருப...