புதன்கிழமை, நவம்பர் 11
Shadow

MOVIES

சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தொடரும் அங்கீகாரம்… நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

சூர்யாவின் ஜெய்பீம் படத்துக்கு தொடரும் அங்கீகாரம்… நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம்.  ஞானவேல் இதனை இயக்கி உள்ளார். இருளர் பழங்குடியின மக்களின் வாழ்க்கை மற்றும் உரிமைகள் பற்றி பேசும் இப்படத்தில் நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியானது. படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், நடிகை ரெஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியன்று ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியால் பல அங்கீகாரங்களும், விருதுகளும் குவிகின்றன. தொடர்ந்து இந்தாண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருதுகள் நாமினேஷனிலும் ‘ஜெய் பீம்’ இடம்பிடித்துள்ளது. இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு ஆஸ்கார் அதிகாரப்பூர்வ ய...
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான கீர்த்தி சுரேஷ் படத்தின் டிரைலர்! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார். விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தலால் டிசம்பர் 31ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. &n...
சினிமா பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது – நடிகை சுருதிஹாசன் வருத்தம்!

சினிமா பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது – நடிகை சுருதிஹாசன் வருத்தம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சினிமா பற்றி எனக்கு ஒன்னுமே தெரியாது - நடிகை சுருதிஹாசன் வருத்தம்! தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற பல மூத்த நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு சுருதிஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். சுருதிஹாசன் கூறியதாவது, “நானும் என் நண்பர் சந்தனுவும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அதை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. காதல் திருமணம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் எனக்கு இஷ்டம் இல்லை. சினிமாவிற்கு வந்த புதிதில் நடிப்பு, சினிமா பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அப்போது நான் இசைத்துறையில் மட்டுமே இருந்தேன். எதிர்பாராமல் நடிகையாக மாற வேண்டிய...
நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!

நான் நல்லவனா கெட்டவனா? – குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நான் நல்லவனா கெட்டவனா? - குழம்பி இருக்கும் விஜய் ஆண்டனி! இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான ’நான்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்...
கீர்த்தி சுரேஷின் பாலியல் வன்முறை காட்சியால் ஓடிடியில் வெளியாகும் ”சாணிக்காயிதம்”

கீர்த்தி சுரேஷின் பாலியல் வன்முறை காட்சியால் ஓடிடியில் வெளியாகும் ”சாணிக்காயிதம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் சாணிக்காயிதம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனின் இரண்டாவது படம் சாணிக்காயிதம். ராக்கி திரையரங்குக்கு வரும் முன்பே சாணிக்காயிதம் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி முடித்தார். ராக்கி போலவே இதுவும் வெளியாகாமல் பல மாதங்களாக பெட்டியில் இருக்கிறது.   சாணிக்காயிதம் வன்முறையில் ராக்கிய விஞ்சியதாக உள்ளது என தகவல்கள் கூறுகின்றன. படத்தின் வன்முறைக் காட்சிகளால் சாணிக்காயிதம் திரையரங்குகளில் வெளியாகாமல்,  நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது. அமேசான் பிரைம் வீடியோவில் ஏப்ரல் மாதம் சாணிக்காயிதம் நேரடியாக வெளியாகிறது இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை பாலியல் வன்முறை செய்யும் காட்சி இடம் பெறுகிறது. ஒரு கிழவர் உள்பட பலர் அவரை பாலியல் வன்முறை செய்கின்றனர். ...
விஜய் ஆண்டனி நடிக்கும் ”ரத்தம்”

விஜய் ஆண்டனி நடிக்கும் ”ரத்தம்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் சென்ற வருட இறுதியில் ஆரம்பித்தது. இன்று படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள அக்னிசிறகுகள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். மழை பிடிக்காத மனிதன் என இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்புத் தோற்றத்தில் விஜயகாந்த் நடிப்பதாக கூறப்படுகிறது. இவற்றுடன் தமிழ்ப் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கத்திலும் ஒரு படம் நடித்து வருகிறார். அமுதனின் இயக்கம் குறித்து பிரமிப்பாக சமூகவலைத்தளத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்க...
ஓடிடியில் வெளியாகிறதா பிக்பாஸ் வருணின் ”ஜோஷ்வா”?

ஓடிடியில் வெளியாகிறதா பிக்பாஸ் வருணின் ”ஜோஷ்வா”?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் பிக்பாஸ் வருண் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜோஷ்வா. இமைபோல் காக்க' திரைப்படம், ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஜோஷ்வா இமைபோல் காக்க திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் வருண், கிருஷ்ணா, ராஹி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். யோகிபாபு, மன்சூர் அலிகான், விசித்திரா, திவ்ய தர்ஷினி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். நீண்ட நாட்களுக்கு முன்னரே அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் காட்சிகள், எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன...
ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

ஓவர் ஆக்டிங், சொதப்பல் மேக்கிங்கால் வீணாய்போனதா “மருத” – கோடங்கி விமர்சனம்

HOME SLIDER, MOVIES, REVIEWS, திரைப்படங்கள், விமர்சனம்
  மதுரைக்கு இன்னொரு பெயர் ‘மருத’. அந்த மருதையில் நடைமுறையில் இருக்கும் சடங்கு செய்முறை நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம்தான் ”மருத” சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கை. ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு அண்ணன் சரவணன் ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக அளவுக்கு  அதிகமாக செய்முறை செய்கிறார். கிடைத்த செய்முறை பணத்தை மாரிமுத்து குடித்தே அழிக்கிறார்.   பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தாரால் அதே அளவு செய்முறை செய்ய முடியாமல் போகிறது.. இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி , ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவமானம் தாங்காமல் மாரிமுத்து தூக்கில் தொங்கி விடுகிறார். இதில் இரு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் பகையாக மாறுகிறது. செய்முறை பணம் வராத ஆத்திரத்தில் இருக்கும் விஜி மகளுக்கு திருமண எற்பாடு செய்...
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் செல்வராகவன்! தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடிகைகள் மீனா, திரிஷா, லட்சுமி மஞ்சு, செரீன், கீர்த்தி சுரேஷ் ஆகியோரும், நடிகர்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், விஷ்ணு விஷால், இயக்குனர் பிரியதர்ஷன், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக விளங்கும் இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோன பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்!

விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விஜய் ஆண்டனி படத்தின் அப்டேட்! இசையமைப்பாளராக சினிமா பயணத்தை தொடங்கி பிறகு கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் ஆண்டனி. 2012-இல் வெளியான நான் படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனிடையே நடிகர் விஜய் ஆண்டனி பாலாஜி முருகன் இயக்கும் 'கொலை' படத்தில் நடித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிகர் சிவா நடித்த தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் சி.எஸ் அமுதன்...