தில்லுக்கு துட்டு 2 ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகர் சந்தானம் புதுப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜான்சன் இயக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது
மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் அருண் விஜய்!
விடாமுயற்சி, பொறுமை, கடின உழைப்பு ஆகியவை மட்டுமே அருண் விஜயை மிகப்பெரிய இடத்தில் கொண்டு சேர்க்கவில்லை. அத்தோடு மிகவும் பொருத்தமான கதைகளை தேர்ந்தெடுக்கும் அவரது படைப்பாற்றல் மற்றும் கதை திறனும் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தை அவர் பால் ஈர்க்க காரணம். அவர் இப்போது தென்னிந்திய சினிமாவில் 'திரில்லர்' வகைகளின் பிராண்ட் தூதராகவே மாறி விட்டார் என்று சொல்லும் அளவுக்கு அவரது திரைப்படங்கள் ஒரிஜினல் மற்றும் டப்பிங் பதிப்பு என இரண்டிலுமே மிகப்பெரிய ஆர்வத்தையும், வரவேற்பையும் பெறுகிறது. தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற அவரது மெடிக்கல் கிரைம் த்ரில்லர் 'குற்றம் 23', தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளிலும் (கத்தர்நாக் போலிஸ்வாலா) நல்ல வரபேற்பை பெற்றதன் மூலம் இது தெளிவாகிறது. இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனரா...
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர...
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் முதல் சோலோ பெண் சூப்பர் ஹீரோ திரைப்படம் கேப்டன் மார்வெல். ப்ரீ லார்சன், சாமுவேல் எல் ஜாக்சன் ஆகியோர் நடிக்க, அன்னா போடென், ரையான் ஃப்ளெக் இயக்கியிருக்கிறார்கள். மார்வெல் ஸ்டுடியோஸ் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இத்திரைப்படம் மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமன்னா பாட்டியா, சமந்தா அக்கினேனி, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் டிஸ்னி இந்தியா தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுவரை 20 மார்வெல் சூப்பர் ஹீரோ படங்களை கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு படத்திலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடிக் கொண்டே வந்திருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வ...
நடிகை ஓவியா நடிப்பில் இன்று வெளியான 90ml திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஆரவ் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் வெற்றியாளர் ஆரவ் மற்றும் ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்தபோதே காதல் கிசுகிசுவில் சிக்கினர். வெட்கத்தைவிட்டு வெளிப்படையாக ஆரவிடம் காதலைச் சொல்லியும், அவர் ஏற்க மறுத்ததால் மனமுடைந்த ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியைவிட்டு பாதியிலேயே வெளியேறினார். இதையடுத்து,பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் நண்பர்களாகச் சகஜமாகப் பழகி வருகின்றனர்.
https://twitter.com/Nafeez_Arav/status/1098473222897422336?s=19
இந்நிலையில், ஓவியா நடிப்பில் 90 ML திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஆரவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், 'இது உன் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையான ...
'நட்பே துணை' எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் - சுந்தர்.சி
நடிகர் ஹரிஷ் உத்தமன்
பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம்.
நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது
மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.
நடிகர் ராஜ்மோகன் பேசும்போது
ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார்.
நடிகர் எரும சாணி விஜய்
இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தி...
இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் சர்வதேச கலாச்சார பரிமாற்ற நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலை மற்றும் கலாச்சார துறை ஏற்பாடு செய்திருந்த "இந்திய சினிமாவில் கலாச்சாரமும் பாரம்பரியமும்" நிகழ்வில் இயக்குனர் கௌரவ் நாரயணன் இயக்கிய "தூங்கா நகரம்" திரைப்படம் திரையிடப்பட்டது.
படம் முடிந்ததும் குறும்பட இயக்குனர்கள் மற்றும் இஸ்தான்புல் யூனிவர்சிட்டியில் உள்ள மாணவர்களுடன் இயக்குனர் கௌரவ் நாரயணன் கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்....
லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ''பன்னிக்குட்டி '' எனும் புதிய படத்தினை அனுசரண் முருகையாஇயக்குகிறார்.
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனுசரண் முருகையா இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் " பன்னிக்குட்டி'' .
இந்த படத்தினை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரு.சுபாஷ்கரன் அவர்கள் தயாரிக்கிறார்.
இப்படத்தில் கருணாகரன் , யோகிபாபு , சிங்கம் புலி , திண்டுக்கல் லியோனி , T.P கஜேந்திரன் , லக்ஷ்மி ப்ரியா ,
ராமர் , 'பழைய ஜோக்' தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆண்டவன் கட்டளை , 49-0 , கிருமி ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 'K' என்கிற கிருஷ்ணகுமார்
இப்படத்திற்கு இசையமைக்கிறார். கிருமி படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரனுடன் இணைந்துள்ள...
மொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி .
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்,பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர்.
சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின்'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்',பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்,நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் 10படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் மார்ச் 15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படம்.
இது 'துவாரகா' தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் .
விஜய...