சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார்..!
முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்னும் கம்பெனியின் மூலம் தயாரிப்பு துறையிலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிவாவின் நெருங்கிய நண்பனாகவும், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலின் மூலம் மிகவும் பிரபலமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்தை சிவா தயாரிக்கிறார். கிரிக்கெட் பின்னணியில் உருவாகும் இந்த படம் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் மகளுக்கும், ஆதரவான அப்பாவுக்கும் இடையில் நடக்கும் கதையை மையப்படுத்தியது.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ‘திரைத்துறை தான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடன் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அரு...









