சனிக்கிழமை, மே 30
Shadow

நயன்தாராவுக்கு ஏற்றது போல் கேரக்டரை மாற்றினேன் – இமைக்கா நொடிகள் இயக்குநர்

‘டிமாண்டி காலனி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இவர் தற்போது நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து அளித்துள்ள பேட்டியில், “முதலில் இந்தக் கதையை எழுதும்போது இரண்டு ஹீரோக்கள் கதையாகத்தான் எழுதினேன். அதன்பிறகுதான் ஒரு கேரக்டரை மட்டும் நயன்தாராவுக்கு ஏற்றது போல் மாற்றினேன். ஆனால், நயன்தாரா இந்தக் கதையில் நடிப்பதில் சில சிக்கல்கள் இருந்தன.

காரணம், கதைப்படி துப்பறியும் நிபுணராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. எனவே, துப்பாக்கியைக் கையாள்வதிலும், வில்லன்களைத் துரத்திப் பிடிப்பதிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்தக் காட்சிகள் காமெடியாக இருக்கக் கூடாது என்பதில் நயன்தாரா தெளிவாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.

கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப் படத்தை வரும் மார்ச் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

345 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன