பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!
Zion Films மற்றும் MRP Entertainment தயாரிப்பில் பிரபுதேவா – சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘கமல் ஸ்ரீதேவி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. !!
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும் இப்படத்தை பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோரும் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கெனவே Zion Films மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கிய ‘வித் லவ்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்து இப்படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையில், மனதை வருடும் வித்தியாசமான காதல் கதையாக ‘கமல் ஸ்ரீதேவி’ உருவாகிறது. மூணாறு மற்றும் சென்னை...









