குருவாயூரப்பன் அருள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளது – பாக்யராஜ் கலகலப்பு
எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் கிடைத்து உள்ளது என்று 'கிரிஷ்ணம்' பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் வேடிக்கையாகப் பேசிக் கலகலப்பூட்டினார்.
தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப் படையில் உருவாகியுள்ள படம் 'கிரிஷ்ணம்'. இப்படத்தை பிஎன்பி சினிமாஸ் தமிழ்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் தயாரித்துள்ளது. தினேஷ்பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டார்.படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது , "இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவ...









