வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

MOVIES

இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

இன்னும் முடியல… இனிமேதான் ஆரம்பம்… தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இன்னும் முடியல... இனிமேதான் ஆரம்பம்... தளபதி 65 படத்தின் அடுத்த அறிவிப்பு! நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தை ‘தளபதி 65’ என அழைத்து வந்தனர். இந்நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பீஸ்ட் என்று பெயர் வைத்து வெளியிடப்பட்ட இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது மேலும் ஒரு அறிவிப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு 2வது போஸ்டர் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்....
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா!

கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கே.ஜி.எப் நடிகர் யாஷுக்கு ஜோடியாகும் தமன்னா! கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை நார்தன் என்பவர் இயக்கி இருந்தார். இப்படம் தான் தற்போது, தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். முதலில் இப்படத்தை நார்தன் தான் இயக்கினார். பின்னர் அவர் விலகியதால் ஓபிலி கிருஷ்ணா இயக்குனராக ஒப்பந்தமாகி உள்ளார். சிம்பு படம் கைநழுவி போனதால், இயக்குனர் நார்தன், அடுத்ததாக கேஜிஎப் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை தமன்னா ஏற்கனவே கே.ஜி.எப் ப...
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முக்கிய அப்டேட்! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், அடுத்த பாடல் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த அப்டேட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற ஜூலை மாதம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதனை தெரிவித்தார்....
‘சூர்யா 40’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

‘சூர்யா 40’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சூர்யா 40’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! நடிகர் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சூர்யா 40 படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 2-வது வாரத்தில் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடித்து முடித்த பின், நடிகர் சூர்யா, வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்...
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தின் முக்கிய அப்டேட்! வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாடிவாசல் படத்தின் ஷூட்டிங் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறுகிய காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது ‘விடுதலை’ படம் உருவாகி வருகிறது. சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி...
குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்!

குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
குறுகிய காலத்தில் தயாராகும் அஜித்தின் புதிய படம்! ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹெச்.வினோத். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் இயக்கிய ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ஹெச்.வினோத்திற்கு அடுத்ததாக அஜித் பட வாய்ப்பு தேடி வந்தது. அதன்படி அஜித்தை வைத்து இவர் இயக்கிய ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் தனது அடுத்தபடத்தையும் இயக்கும் வாய்ப்பை அஜித் கொடுத்தார். இயக்குனர் ஹெச்.வினோத் தற்போது அஜித்தின் ‘வலிமை’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வலிமை படத்துக்கு பின் அஜித் நடிக்கும் 61-வது படத்தையும் ஹெச்.வினோத் தான் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜ...
5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன்  கூட்டணி!

5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன் கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
5-வது முறையாக விஜய் சேதுபதி பிரபல இயக்குனருடன் கூட்டணி! சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ படம் மூலம் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமானார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கியிருந்தார் சீனு ராமசாமி. சில பிரச்சனைகளால் அந்த படம் வெளியாகவில்லை. இதையடுத்து விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து, சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பின்னர் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி 4-வது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமியுடன் கூட்டணி அமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் 5-வது முறையாக இணையும் பட...
ஆர்.ஆர்.ஆர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

ஆர்.ஆர்.ஆர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5  மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கொரோனா தொற்று 2வது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிரு...
இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி!

இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் ராமுடன் கூட்டணி அமைக்கும் ஆர்.ஜே.பாலாஜி! விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றி கண்ட ஆர்.ஜே. பாலாஜி, கடந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் எம்.ஏ, தங்க மீன்கள், பேரன்பு போன்ற படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....