நவாசுதீன் சித்திக் போலீஸ்காரராக நடிக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான “ரவுது கா ராஸ்” இப்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!
இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது சமீபத்திய நேரடி-டிஜிட்டல் படமான ரவுது கா ராஸ் படத்தை வெளியிட்டுள்ளது. ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாட் ஃபிஷ் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சுரபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பரபரப்பான திரில்லர் படத்தில், போலீஸ் அதிகாரி தீபக் நேகியாக, பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
உத்தரகாண்டில் உள்ள ரௌது கி பெலி என்ற அழகிய கிராமத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் "ரவுது கா ராஸ்" படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கொலையே நடந்திராத ஒரு கிராமத்தில், திடீரென பார்வையற்ற பள்...









