சனிக்கிழமை, ஜூலை 4
Shadow

நேசிப்பாயா விமர்சனம் 2.5/5

 

 

நேசிப்பாயா விமர்சனம் 2.5/5

 

தனித்தனி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹீரோ-ஹீரோயின் காதலிக்கிறார்கள். கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்கிறார்கள்.

ஹீரோயினுக்கு வெளி நாட்டில் வேலை கிடைக்கிறது அதனால் காதலர்களுக்குள் சண்டை வந்து காதல் முறிந்து போகிறது.

இது நடந்து சில ஆண்டுகளுக்கு பின் போர்ச்சுக்கல் நாட்டில் இந்திய வாலிபரை சுட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக ஹீரோயின் கைது செய்யப்பட்ட்தாக செய்தி வருகிறது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹீரோ உடனே போர்ச்சுக்கல் போகிறார். அங்கே காதலியை பார்த்தாரா? யார் கொலை செய்தது? காதலி விடுதலை ஆனாரா? காதல் கை கூடியதா? இதற்கெல்லாம் விடை சொல்கிறது நேசிப்பாயா திரைக்கதை.

ஹீரோவாக புதுமுகம் ஆகாஷ்முரளி, ஹீரோயினாக அதிதி ஷங்கர், போர்ச்சுக்கல் தொழில் அதிபராக ச்ரத்குமார், அவர் மனைவியாக குஷ்பு, போலீஸ் அதிகாரியாக பிரபு உட்பட பல நடித்திருக்கிறார்கள்.

அறிமுகம் என்பதால் ஆகாஷ்முரளிக்கு அழுத்தமான கேரக்டர் இல்லை. நடிப்பே வரவில்லை என்றாலும் கொஞ்சம் அப்பா முரளி மாதிரியும், கொஞ்சம் அண்ணன் அதர்வா மாதிரியும் வந்து போகிறார். இனி அடுத்தடுத்த படங்களில் தன்னையும், நடிப்பையும் மெருகேற்றிக் கொண்டால் ஹீரோ மெட்டீரியலாக தொடரலாம்.

அதிதி ஷங்கர் பெருசா காட்சிகள் இல்லாமல் போனாலும் வருகிற இடங்களில் நடிக்க முயற்சிக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில் ஓகே… ஆனால் சோகமான காட்சிகளில் அதிதி இன்னும் பயிற்சி வேண்டும்.

சரத்குமார் வழக்கமான பணக்கார தொழில் அதிபர் வில்லத்தனம் நிறைந்த நடிப்பு. ஆனால் அவர் மனைவி குஷ்புவுக்கு வில்லத்தனம் சுத்தமாக செட் ஆகல.

ரொம்ப சாதாரணமான கதை. திரைக்கதையில் பெரிய திருப்பங்கள், பரபரப்புகள் எதுவும் இல்லை. ஒரே ஆறுதல் போர்ச்சுக்கல் நாட்டை பார்க்காதவர்கள் சினிமா பார்க்கும் சாக்கில் அந்த நாட்டை சுற்றிப்பார்க்கலாம்.

கேட்கும் பட்ஜெட்டை நோ சொல்லாமல் கொடுக்கும் தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே போர்ச்சுக்கல் நாட்டில் இத்தனை கோடி செலவு செய்து இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது மற்றபடி கதைக்கும் போர்ச்சுக்கல் நாட்டுக்கும் மருந்துக்குக்கூட தொடர்பு இல்லை.

காதல் படங்களில் பாடல்கள் மூலம் ஸ்கோர் எடுக்கும் யுவன்ஷங்கர் இந்த படத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.  அல்லது அவரை இயக்குனர் விஷ்ணுவர்தன் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டாரா?

பல ஆண்டுகளுக்கு பின் இயக்குனர் விஷ்ணுவர்தன் இந்த பட்த்தை இயக்கி இருக்கிறார். இன்னும் கூட கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் நேசிப்பாயா ரசிகர்களால் இன்னும் நேசிக்கப்பட்டிருக்கும்.

பிளஸ்: கேட்ட பட்ஜெட் தொகையை கொடுத்த பிரமாண்ட தயாரிப்பாளர். தெரிந்த பிரபல நடிகர்கள் பலர்.

மைனஸ்: தெளிவில்லாத கதை. பரபரப்பே இல்லாமல் லாஜிக் சுத்தமாக இல்லாத திரைக்கதை. யூகிக்க முடிந்த காட்சிகள்.

 

கோடங்கி 2.5/5

 

212 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன