வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

லிங்குசாமி இயக்கத்தில்  போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் “தி வாரியர்”.!

லிங்குசாமி இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் “தி வாரியர்”.!

CINI NEWS, HOME SLIDER, திரைப்படங்கள், நடிகர்கள்
  அட்டகாசமான போலீஸ் அதிகாரியாக ராம் பொத்னேனி நடிக்கும் புதிய படம்.!?   'ஆனந்தம்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி.பல வெற்றிப் கொடுத்த இவர் முதன் முறையாக தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் இயக்குகிறார்.   தெலுங்கில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான 'ராம் பொத்னேனி' ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு … 'RAPO-19' என்ற டைட்டிலோடு  ஹைதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.   போலீஸ் டிபார்ட்மெண்ட் பின்னணியில் நடக்கும் கதை. ராம் பொத்னேனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். 'மிருகம்' ஆதி பினிஷெட்டி இதில் முரட்டுத்தனமான வில்லனாக நடிக்கிறார்.   ராம் பொத்னேனி முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் என்பதால் இப்படம்  ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 'தி வாரியர்' என...
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!

அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது! ‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இந்நிலையில், நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது அப்படக்குழு. இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது....
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு! தலைநகர் புதுடெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில்  இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அலங்கார ஊர்திகளை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு தேர்வு செய்கிறது. தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை நிபுணர் குழு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு, கொரோனா பெருந்தொற்று உள...
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!

அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்! சுகுமார் இயக்கியத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என்று தெரிவித்து அதனுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்....
விஸ்வரூபம் – கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகாராஜ் காலமானார்!

விஸ்வரூபம் – கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகாராஜ் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள்
விஸ்வரூபம் - கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகாராஜ் காலமானார்! புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார். 83 வயதான பிர்ஜூ மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். பிரபல கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிர்ஜூ மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். இவர் நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் 'உன்னைக் காணாத நான்' என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பலரின் பாரட்டுக்களை பெற்றவர் என்பது குறி...
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை! சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூரில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ...
பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71  லட்சம்!?

பிக் பாஸ் வின்னர் ராஜுக்கு கிடைத்த தொகை 71 லட்சம்!?

HOME SLIDER, NEWS, TV news, செய்திகள்
    சின்னத்திரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. இன்று அந்த இறுதி எபிசோடு ஒளிபரப்பப்பட உள்ளது. பொதுவாகவே பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளருக்கு 50 லட்சம் என்ற பரிசு தொகை அறிவிக்கப்படும். அந்த வகையில் ராஜுவுக்கும் 50 லட்சம் பரிசு தொகை அளிக்கப்பட்டுள்ளது. அது போக அந்நிகழ்ச்சியில் ராஜுவுக்கு ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்கள் இருந்ததால் ராஜுவிற்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாம். எனவே ராஜு மொத்தமாக 71 லட்சம் ரூபாய்யை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெற்றுள்ளாராம். தற்போது இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பிக் பாஸ் ரசிகர்களிடம் தீயாய் பரவி வருகிறது...
தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

flood news, HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது. வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்...
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
  தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்! ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 34), தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல் கோ...
குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – மம்தா பானர்ஜி அதிர்ச்சி

குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு – மம்தா பானர்ஜி அதிர்ச்சி

HOME SLIDER, NEWS, செய்திகள்
     குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி புதுடெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில்  மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது : இந்த முடிவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் மேற்கு வங்க மக்கள் அனைவரும் மிகவும் வேதனையடைந்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வங்கம் முன்னணியில் இருந்தது மற்றும் பிரிவினையின் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய விலையை செலுத்தியுள்ளது. நேதாஜி மற்றும் நாட்டின் சுதந்திரத்த...