வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

சென்னையில் பலத்த காற்று: மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு!

சென்னையில் பலத்த காற்று: மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் பலத்த காற்று: மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு! சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மாலையில் இருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரித்தது. தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதற்கிடையே பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை...
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கரையை கடக்க தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா- வட தமிழகம் இடையே சென்னை அருகில் கரையை கடக்கும் என வானிமை மையம் தெரிவித்திருந்தது. 20 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர்  4 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்தது. சென்னையில் இருநது 80 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை மையம் அறிவித்திருந்தது. சற்று நேரம் சென்ற பின்னர், கடந்த 6 மணி நேரத்தில் 16 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்....
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு!

Assembly news, HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் நாளை ஆளுநர்கள் மாநாடு! மாநில ஆளுநர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கான மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு 50-வது மாநாடு நடந்தது. அதன்பின், கொரோனா பரவலால் கடந்த ஆண்டு இந்த மாநாடு நடக்கவில்லை. இந்தியாவில் கடந்த சில மாதமாக கொரோனா தொற்று குறைந்து வருவதால் இந்த மாநாடு இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்களுக்கான 51-வது மாநாடு டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நாளை நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குகிறார். அவரது தலைமையில் நடைபெறும் 4-வது மாநாடு இது....
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பெட்ரோல் சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதையடுத்து, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 101.40 ரூப...
வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு!

வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வருகிற 15-ந்தேதிக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்த பெங்களூரு மாநகராட்சி கெடு! பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வின்படி 80 ஆயிரம் வளர்ப்பு நாய்கள் இருப்பது தெரியவந்தது. கட்டாயம் உரிமம் பெற்றப் பின்னரே வளர்ப்பு நாய்களை வளர்க்க வேண்டும் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்குவது நிறுத்தப்பட்டது. தற்போது வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் அவற்றுக்கு உடல் நலக்குறைவு அல்லது வயது முதிர்ச்சி ஆனால் அவற்றை வீதிகளில் விட்டு விடுகின்றனர். இதனால், சாலைகளில் வளர்ப்பு நாய்கள் இறந்து கிடப்பதை காண முடிகிறது. நடைபயிற்சி என்ற பெயரில் சாலை ஓரங்களில் நடைபாதைகளில் நாய்களை அழைத்துச் செல்வோர் அவைகளை இயற்கை உபாதை கழிக்க வைக்கின்றனர். இதனால், நடைபாதைகளில் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இது...
தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் 29 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி உள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றும், நாளையும் வடதமிழகத்தில் மிக மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்,  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்...
மாநாடு படத்தின் புதிய அப்டேட்

மாநாடு படத்தின் புதிய அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு படத்தின் புதிய அப்டேட் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நவம்பர் 25ம் தேதி ‘மாநாடு' வெளியிட இருக்கிறார்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மாநாடு படத்தின் ஆடியோ ரிலீசுக்கு தயாராக உள்ளோம். விரைவில் தேதியை அறிவிக்க இருக்கிறோம். காத்திருங்கள்’ என்று பதிவு செய்து இருக்கிறார்...
மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

flood news, HOME SLIDER, politics, செய்திகள், தமிழக அரசியல்
மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு -முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வந்த ஐந்து மாதங்களில் 771 கி.மீ தூரத்திற்கு மழைநீர் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளது. ஆகாயத் தாமரைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த முறை வந்த மழையால் கிட்டத்தட்ட 15 நாட்கள் வரை மழை நீர் தேங்கி இருக்கும். ஆனால், இந்த முறை தேங்கி இருந்த மழை நீர், மழை விட்டதும் வடிந்துவிட்டது. மெட்ரோ பணி நடைபெறும் இடங்களிலும், தாழ்வான இடங்களிலும் தேங்கி இருக்கும் நீரை மோட்டார் மூலம் எடுத்து வெளியேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்காக, 560 பம்ப் செட் மோட்டார்கள் பயன்பாட்டில் உள்ளது. மேலும், மழை முடியும்வரை அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்க உத்தரவிட்டுள்ளேன். மாநக...
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா!

மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
மீண்டும் சுந்தர்.சி உடன் கூட்டணி அமைக்கும் ராஷி கண்ணா! நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷி கண்ணா, மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 3’ படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கண்ணா தற்போது மீண...
மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி!

மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் இணையும் ‘அண்ணாத்த’ கூட்டணி! தமிழ், தெலுங்கில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம்வந்த சிவா, கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலை வாரிக்குவித்து வருகிறது. இதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ள இயக்குனர் சிவா, இப்படத்தை முடித்த பின்னர், மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தை ரஜினியின் மகள் சவுந்தர்யா தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....