சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்!
சென்னை இளைஞன் ஹாலிவுட் படத்தில் கதா நாயகனாக அறிமுகம்!
தமிழில் நடிக்க ஆசை!
சென்னை இளைஞன் எபின் ஆன்டனி ஆங்கில படத்தில் கதாநாயகனாக அறிமுகாகியுள்ளார் . சமீபத்தில் அமெரிக்காவில் ஆமேசன் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியான டேனில் ரான்சம் கதை எழுதி இயக்கிய " ஸ்போக்கன் "(Spoken) என்ற ஹாரர் படத்தில் தான் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதில் கதா நாயகியயை துரத்தி காதலிக்கும் இசை கலைஞனாக நடித்துள்ளார்.
சென்னையில் வளர்ந்த இவருக்கு சினிமா நடிப்பில் ஆர்வம் அதிகமாக இருந்த காரணத்தினால் கல்லூரியில் படிக்கும் போதே நூறுக்கும் மேற்பட்ட தமிழ் , ஆங்கில படங்களுக்கும் கார்ட்டூன் படங்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் . அதுவே இவருக்கு சினிமாவில் பிரவேசிக்க முதல் படியாக அமைத்தது. அமெரிக்காவில் மேல் படிப்புக்கு சென்றவர், தன் நடிப்பு திறனை அதிகரிக்க , லாஸ் ஏஞ்சல்சிலுள்ள நியூயார்க் ஃபிலிம் அகாடமியில் ந...









