கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!
கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ஹாரர் திரில்லர் “தாழ் திறவா” பட டீசர் !!
திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது.
இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்ட...









