பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, 'அநீதி', 'வாழை', உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'ஃபயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும்.
ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் 'ஃபயர்' திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை எழுதியுள்ளார்....
மெகாஸ்டார் சிரஞ்சீவி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் நானியின் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் வழங்கும், சுதாகர் செருக்குறி, SLV சினிமாஸ் இணையும், புதிய படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். அவரது கெரியரில் தொடர்ச்சியாக அறிமுகத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி வந்துள்ளார். நம்பிக்கைக்குரிய வளரும் இயக்குநர்களைக் கண்டறிந்து அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன், அவரது தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். சிரஞ்சீவியின் அடுத்த படம்,
அவரது தீவிர ரசிகரான ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற மிகவும் திறமையான இயக்குநருக்கு ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தை வழங்கியுள்ளது. இயக்குநரின் முதல் படமான “தசரா” மாபெரும் வெற்றி பெற்றது, வணிகரீதியாக ...
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் & தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
அறிமுக இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சூது கவ்வும் 2' திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி எஸ். ஆர். ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்...
தென்னிந்திய சினிமாவின் அடையாளமான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை STRI சினிமாஸ் பெருமையுடன் அறிவித்துள்ளது.
பழம்பெரும் நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, STRI சினிமாஸ் தனது வரவிருக்கும் திரைப்படமான "சில்க் ஸ்மிதா – Queen of the South" திரைப்படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு, நடிகை சில்க் ஸ்மிதாவின் வசீகரிக்கும் கதையை உயிர்ப்பிக்கும். இதில் சந்திரிகா ரவி பெயரிடப்பட்ட பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஜெயராம் சங்கரன் இயக்கத்தில், S.B விஜய் அமிர்தராஜ் தயாரிப்பில், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் படம் தயாரிப்பைத் தொடங்க உள்ளது.
அவரது பிறந்தநாளில் இந்த சிறப்பு அறிவிப்பைக் குறிக்கும் வகையில், தயாரிப்பாளர்கள் ஒரு பிரத்யேக வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது பார்வையாளர்களுக்கு காந்தக்கண்ணழகி - சில்க் ஸ்மி...
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் எஸ்.ஜெ.சூர்யா, பிரபல பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம்.
சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15 - வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொண்டார். தமிழ்நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் நினைவுப்பரிசாக சபாநாயகருக்கு செங்கோல் வழங்கப்பட்டது. இதில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என சுமார் 4 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
சபாநாயகர் உரை
ஸ்ரீ ஓம் பிர்லா தனது பட்டமளிப்பு விழா உரையில், எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மறைந்த ஐசரி வேலனின் பாரம...