சச்சின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த நபர் கைது..!
சச்சின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த நபர் கைது
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுக்கு தொலைபேசி மூலம் திருமண தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கிழக்கு மித்னாபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேப்குமார் மைட்டி (32). இவர் படித்து முடித்து வேலையில்லாமல் சுற்றி கொண்டிருக்கின்றார்.
சமீபத்தில் மும்பையில் உள்ள தனது சகோதரரை பார்க்கசென்ற அவர், தற்செயலாக சாராவையும் பார்த்துள்ளார். அப்போதிருந்து சாரா மீது காதல் கொண்ட அவர், எப்படியோ அவரின் கைபேசி எண்ணை கண்டுபிடித்து சாராவுக்கு தொலைபேசி மூலம் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சாரா போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ரகசியமாக விசாரித்துவந்த போலீசார் சாராவுக்கு தொல்லை கொடுத்த அந்த நபரை மேற்குவங்கத்தில் வைத்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தான் சச்சின் மகளை உயிருக்கு...









