தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியது காட்டுமிராண்டித்தனமானது – டி.எம்.ஜே.ஏ கண்டனம்
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்படும் ஊடகத்துறை சமீப காலமாக அரசுகள், அதிகார வர்கத்தால் கடும் தாக்குதலை சந்தித்து வருகிறது.
தூத்துக்குடியில் மக்கள் உயிரை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அறவழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
இந்த மக்கள் எதிர்ப்பு 100வது நாளை தொட்டதால் அதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அறவழியில் மக்கள் ஊர்வலமாக சென்றார்கள்.
அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி தமிழக காவல்துறை தன் அடக்குமுறையை மக்கள் மீது செலுத்தியது.
அறவழியில் சென்ற மக்களை தடியடி நடத்தி போலீஸ் கலைக்க முயற்சித்ததில் ஏராளமான அப்பாவி மக்கள் தாக்கப்பட்டனர்.
இதில் தமிழக காவல்துறை அடக்குமுறையின் உச்சமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு பெண் உட்பட 11 அப்பாவி மக்கள் பலியானார்...









