“கடுக்கா” ரசிக்கும் சினிமாவா? கோடங்கி விமர்சனம் 3.5/5
ஒரு பெண் இரண்டு பேரின் காதலில் சிக்குவது... அல்லது ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலிப்பது... இப்படி பல கதைகளை பார்த்து இருந்தாலும் இந்த கடுக்கா படம் சற்றே வித்தியாசமான கதையை சொல்ல முயற்சிக்கிறது.
முற்றிலும் புது முகங்களை வைத்து முருகராசு ரசிக்கும்படி ஒரு படம் கொடுத்து இருக்கிறார்.
கதைப்படி ஹீரோயின் 2 பேர் காதல் வலையில் சிக்குகிறார். கடைசியில் ஹீரோயின் யாருக்கு சொந்தமாகிறார் எனபதே. படிக்கிற பெண்களுக்கு சமூகத்தில் தொடர்ந்து எப்படி எல்லாம் தடைகள் வருகிறது. அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை எல்லாம் தன்க்கே உரிய வெள்ளந்தி கிராம மக்கள் மூலம் சொல்கிறார் இயக்குனர்.
முகம் தெரிந்த நடிகர்கள் யாரும் இல்லாத போதும் திரைக்கதை தொய்வில்லாமல் போவது கதைக்கு பலம்.
கிராம மக்களின் யதார்த்த வாழ்வில் சாதாரண பேச்சுக்கள் கூட நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். அப்படி இதில் பல வசனங்கள் நறுக்...









