ஹர ஹர மகாதேவகி விமர்சனம்
மரணத்திற்கு பின் இறுதி காரியங்களுக்கு தேவை படும் வண்டி, பூ அலங்காரம், மேளதாள ஆட்களை அனுப்பும் தொழில் செய்கிறவர் கதாநாயகன். பொறியியல் படித்தாலும் இந்த தொழிலை விரும்பி செய்கிறார்.
கோயில் குளத்தில் நீராடிவிட்டு துண்டுடன் கரையேறும் கதாநாயகனை அதே குளத்தில் தோஷ நிவர்த்திக்கு மூழ்கி எழும் கதாநாயகி நிக்கி கல்ராணி பார்க்கக் கூடாத கோலத்தில் பார்த்து "கடவுளே... கடவுளே... கடவுளே" என கத்துகிறார்.
அதன் பிறகும் ஒரு முறை பாத்ரூமிலும், இன்னொரு முறை தெருவிலும் ஏடாகூடமாக பார்க்க இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. அதுவே காதலாகவும் மாறி கடைசியாக காதலும் பிரேக் அப் ஆகிவிடுகிறது.
காதலித்த போது ஒருவருக்கு ஒருவர் வாங்கி கொடுத்த பரிசு பொருட்களை ஒரு ரிசார்ட்டில் திருப்பி கொடுக்க முடிவு செய்கிறார்கள். இந்த பொருட்களை அரசியல் கட்சி கொடுத்த பையில் வைத்து எடுத்து செல்கிறார் ஹீரோ.
தேர்தலில் அனுதாப...









