விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து தயாரித்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம். தற்போது ஜி ஸ்குவாட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ திரையுலக ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தினர் மத்தியில் படம் குறித்தான எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
இயக்குநர் விஷால் வெங்கட், அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான 'பாம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதிய...









