ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் 2-ந்தேதி மனு தாக்கல்
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவது உறுதி என்று அவரது ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வுமான தங்க தமிழ்ச்செல்வன் ஏற்கனவே கூறினார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தினகரன் நேற்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தை எப்படி எதிர்கொள்வது எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் தினகரன் அணி மாவட்ட செயலாளர் கள் கூட்டம் இன்று மாலை திருச்சியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தினகரன் இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டார்.
சென்னையை அடுத்துள்ள சிங்கபெருமாள் ...









