வியாழக்கிழமை, மே 21
Shadow

HOME SLIDER

ரிலீஸ் நேரத்தில் ரெய்டு வரப்போகுது உஷார் – அண்ணாதுரை பாடல் ரிலீஸ் விழால் உதயநிதியின் ஷாக் பேச்சு

ரிலீஸ் நேரத்தில் ரெய்டு வரப்போகுது உஷார் – அண்ணாதுரை பாடல் ரிலீஸ் விழால் உதயநிதியின் ஷாக் பேச்சு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது. நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன். பறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற...
சூப்பர் மார்க்கெட்டில் மிரட்ட வரும் திகில் படம் பேய் பசி..!

சூப்பர் மார்க்கெட்டில் மிரட்ட வரும் திகில் படம் பேய் பசி..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  இதுவரை எடுக்கப்படாத வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் # பேய் பசி'. ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரை மையமாக வைத்து இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. 'பேய் பசி' குறித்து இப்பட இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசுகையில் , '' 'Non Working Hours' நேரத்தில் இருக்கும் எந்த ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்சும் திகில் என்றால் என்னவென்பதை உணர்த்தும் . இதனை மையமாக வைத்தே இப்படத்தின் கதையை உருவாக்கினேன். இப்படத்தின் கதை ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள் நடக்கும் கதையாகும் இது. ஒரே இடத்தில் நடந்தாலும் , சுவாரஸ்யம் எவ்விதத்திலும் குறையாதவாறு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கதைக்கு பொருத்தமான தலைப்பை பற்றி ஆலோசனை செய்த பொழுது , 'பேய் பசி' அமைந்தது. இக்கதைக்கு இதை விட பொருத்தமான தலைப்பு வேறெதுவும் இருக்க முடியாது. இந்த தலைப்புக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மு...
பல புதுமைகளுடன் ரிலீசுக்கு தயார் ஆன விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை..!

பல புதுமைகளுடன் ரிலீசுக்கு தயார் ஆன விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை..!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள்
  புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. 'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். ...
இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ரசூல்பூக்குட்டியின் ஒரு கதை சொல்லட்டுமா பட டீசர்..!

இயக்குனர் ஷங்கர் வெளியிட்ட ரசூல்பூக்குட்டியின் ஒரு கதை சொல்லட்டுமா பட டீசர்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'ஒரு கதை சொல்லட்டுமா'. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தி...
விஜயசேதுபதி வெளியிட்ட பதுங்கி பாயணும் தல பட   சிங்கிள் டிராக்..!

விஜயசேதுபதி வெளியிட்ட பதுங்கி பாயணும் தல பட சிங்கிள் டிராக்..!

HOME SLIDER, Trailer, டிரைலர்கள்
  https://youtu.be/hfOO-Az4_y8 MEDIA PASSION PRODUCTIONS AMEENA HUSSAIN தயாரிப்பில் S.P.மோசஸ் முத்துப்பாண்டி இயகத்தில் உருவான திரைப்படம் "பதுங்கி பாயனும் தல ". மைக்கேல், நைனிகா, வேல ராமமூர்த்தி , சிங்கம்புலி , M. S பாஸ்கர் நடித்திருக்கும் திரைப்படத்தின் நீ மாமனா மச்சனா என்ற பாடலை படத்தின் இயக்குனர் S.P.மோசஸ் முதுப்பாண்டி அவர்களின்பாடல் வரிகளில், வல்லவன் சந்திரசேகர் இசையில் அந்தோணி தாஸ் பாடியுள்ளார் . இந்த பாடலின் SINGLE TRACK - ஐ மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார். இது குறித்து விஜய் சேதுபதி கூறுகையில் பாடல் வெகு சிறப்பாக வந்துள்ளது . இது மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என்று கூறியுள்ளார்.   https://youtu.be/hfOO-Az4_y8  ...
தமிழகத்தில் இப்போது நடக்கும் வருமானவரி ரெய்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது – ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

தமிழகத்தில் இப்போது நடக்கும் வருமானவரி ரெய்டு அரசியல் உள் நோக்கம் கொண்டது – ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

HOME SLIDER, politics, செய்திகள்
  வருமான வரி சோதனையின் நோக்கம் நேர்மையற்றது - அரசியல் உள்நோக்கமுடையது-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் குடும்பத்தினரின் வசிப்பிடங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் வருமானவரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்போர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்போர் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு. ஆனால் 187 இடங்கள், 1800 அதிகாரிகள், 20,000 காவலர்கள் என ஒரு படையெடுப்பை போல இப்போது நடந்து கொண்டிருக்கும் இந்த வருமான வரிச்சோதனைகளின் நோக்கம் நிச்சயமாக நேர்மையான நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்ல முடியும். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது 3 கண்டெய்னர்களில் பிடிக்கப்பட்ட பணம் பல நாட்கள் யாருடையது என்று தெரியாமல், திடீரென்று ஒருநாள் நீதிமன்றத்தில் ‘ஸ...
இப்படை வெல்லும் விமர்சனம்

இப்படை வெல்லும் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
இப்படை_வெல்லும் உதயநிதி ஸ்டாலினின் திரைப்பயணத்தில் புதுசாக இருக்கும் படம். அதிரடிகள் இல்லாத ஆக்‌ஷன் படம்.  கதையில் தான் யார் என்பதை  முழுமையாய் உள்வாங்கி நடித்திருக்கிறார் உதயநிதி. கதை வழக்கம் போல தங்கை காதலுக்கு குறுக்கே நிற்கும் போலீஸ் அண்ணன். சூழல் காரணமாக தீவிரவாதியாக சித்தரிக்கப்படும் காதலன் இவற்றை எதிர் கொள்ளும் நாயகி. கதை பெரிதாக இல்லாவிட்டாலும் திரைக்கதையை நம்பி களமிறங்கி புதுசாக முயற்சித்து வெற்றி பெற்று இருக்கிறார் கவுரவ்.  இயக்குனரின் முதல் படம் தூங்கா நகரம், அடுத்து சிகரம்தொடு  படங்களை தொடர்நது  இப்படை வெல்லும் 3வது  படம். முதலிரண்டு போலவே புதுசாக முயற்சித்து ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறார் இயக்குனர் கவுரவ்.  நாயகனுக்கு இணையாக படம் முழுவதும் வரும் வேடம் நாயகி மஞ்சிமா மோகனுக்கு... அதை அருமையாக செய்திருக்கிறார். அழகான நாயகியை கேமராவும் அழகாகவே காட்டி இ...
தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த படம் டாவு..!

தில்லுக்கு துட்டு இயக்குனரின் அடுத்த படம் டாவு..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
சுவாரஸ்யமான தலைப்புகள் மக்கள் மத்தியில் என்றுமே நல்ல வரவேற்பை பெறும். காமெடிக்கு பெயர் போன ஒரு இயக்குனர் ஒரு சுவாரஸ்யமான தலைப்போடும், அதற்கு தகுந்த அணியையும் அமைத்தால் அந்த படம் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். 'தில்லுக்கு துட்டு' படத்தில் மாபெரும் வெற்றியை ருசித்த இயக்குனர் ராம்பாலா, எல்லா தரப்பான மக்களும் கொண்டாடக்கூடிய காமெடியை தருவதில் வல்லுநர். அவர் தற்பொழுது நடிகர் 'கயல்' சந்திரனுடன் இணைந்து 'டாவு' என்ற முழு நீள காமெடி படமொன்றை தொடங்கியுள்ளார். '' இந்த காதல்-காமெடி கதைக்கு சந்திரன் நிச்சயம் பெரும் பலம் சேர்ப்பார். தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க அவர் முனைப்போட்டுள்ளார். அவரது தீவிரமும், எங்களது தயாரிப்பாளர் ரகுநாதன் P S அவர்களின் தொலைநோக்கு பார்வையும் இணைந்து 'டாவு' படத்தை சிறப்பாகவுள்ளது. இந்த கதைக்கு 'டாவு' தான் பொருத்தமான தலைப்பு. இன்றைய சினிமாவை ஆதர...
பாஜ. எதிர்ப்பு மாநில முதல்வர்களை அடுத்தடுத்து சந்திக்கும் கமல்… இன்று மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்..!

பாஜ. எதிர்ப்பு மாநில முதல்வர்களை அடுத்தடுத்து சந்திக்கும் கமல்… இன்று மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்..!

HOME SLIDER, politics, செய்திகள்
அரசியலுக்கு வரப்போகும் கமல்ஹாசன் முதலில் கேரள முதல்வர் பிரனாய் விஜயனை சந்தித்தார். டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சென்னையில் கமலை சந்தித்தார். இன்று கொல்கத்தா சென்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல். பாஜ எதிர்ப்பு அணி உருவாக்கமா... இன்று கொல்கத்தாவில் நடக்கும் திரைப்பட விழா முடிவில் முதல்வர மம்தா பானர்ஜி நடிகர் கமல் ஹாசன் சந்திப்பு நடக்கும். தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கமல் ஹாசன் முயற்சிக்கிறார்.  ...