“விசித்திரன்” படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்களாக தூங்கவில்லை – இயக்குனர் ஆர் வி உதயகுமார்.
ஆர் கே சுரேஷ் நடிப்பில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் "விசித்திரன்". இப்படம் இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்கு
ப்ரத்யேகமாக திரையிடப்பட்டது. அதன் பிறகு பேசிய இயக்குனர் சீனு ராமசாமி,
வழக்கமாக, ஒரு படம் ரிலீஸானால் 15 நாட்களுக்கு பிறகு தான் இயக்குனர் சங்க நிர்வாகி நம்பி அவர்கள் அழைப்பார், அதற்குள் பலர் அந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள். அதன் பின்னர் தான் குறிப்பிட்ட படத்தை இயக்குனர் சங்கத்திற்கு திரையிடுவர். ஆனால், விசித்திரன் படத்தை முதலில் இயக்குனர் சங்கத்தினற்கு திரையிடலாம் என்று ஆர் கே சுரேஷ் சொன்னபோது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன்.
எப்போதும், படைப்பாளிகளிடம் திரையிடும் படத்தை பற்றி அவர்கள் முதலில் முன் வைப்பது விமர்சனத்தையும், கேள்வியையும் தான். அதன் பிறகு தான் பாராட்டு என்பது கூட. அதனால் நான் எப்போதுமே என் படத்தின் பர்ஸ்ட் காபியை எனது துணை இயக்...









