சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் – பொன்.மாணிக்கவேல்
தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிவடைந்து அவர் இன்று பணி ஓய்வுபெறுகிறார்.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு விசாரித்தது.
சிபிஐக்கு வழக்குகளை மாற்றும் தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதம். இன்றுடன் ஓய்வுபெறும் பொன். மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநில போலீசும், சிபிஐயும் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். விசாரணை தொடர்பான அறிக்கையை வேறு எந்த ஒரு அதிகாரியிடமும் அவர் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர் நேரடியாகவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
அவரை சிறப்பு அதிகாரியாக ஓராண்டு நியமனம் செய...









