வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

காமாட்சி அம்மன் கோவில் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்தவநாயக்கன்பட்டியில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பவுர்ணமி பூஜையும், மாசி கொடை விழாவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக தங்குமிடம், கழிவறைகள், குளியலறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 17-ந்தேதி பவுர்ணமி பூஜையை முன்னிட்டு கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள குளியலறையில் குளிக்க சென்ற பெண் பக்தர் ஒருவர், அங்கு மறைவான இடத்தில் ரகசிய கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தார். தொடர்ந்து குளியலறைகள் முழுவதும் கோவில் ஊழியர்கள் சோதனை செய்தபோது, அங்கு மேலும் 2 இடங்களில் ரகசிய கேமராக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில் பூசாரி முருகன், விளாத்திக...
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட நடிகை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
    பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது. கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் முதல் குழந்தைக்கு தாய் ஆகி உள்ளார். இந்த தகவலை அவரது கணவர் நிக் ஜோனஸ் தமது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் நிக்கை டேக் செய்து ஒரு குறிப்பைப் பகிர்ந்துள்ள பிரியங்கா, "நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சிறப்பு நேரத்தில் நாங்கள் எங்கள் குடும்பம் குறித்து கவனம் செலுத...
லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை!

லிப் லாக் முத்தக் காட்சியில் நடிப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகைகள்
    சினிமா துறையில் கவர்ச்சிக்கும், முத்தக்காட்சிகளுக்கும் மறுத்த பல நடிகைகள் அவர்களுடைய வாய்ப்பை இழந்து பிறகு அது போன்ற காட்சிகளில் நடித்திருக்கின்றனர். இந்த பட்டியலில் நடிகை அனுபமா பரமேஸ்வரனும் தற்போது இணைந்துள்ளார். 2015-இல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி முன்னணி நடிகைகளில் ஒருவராக சேர்ந்தவர் அனுபமா. இவர் தனுஷ் நடித்த கொடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். பல மொழி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் திரிவிக்ரம் இயக்கத்தில் வெளியான அ ஆ தெலுங்கு படத்தில் சமந்தாவும் அனுபமா பரமேஸ்வரனும் கதாநாயகியாகளாக நடித்தனர். நல்ல வரவேற்பை பெற்ற அந்த படம் அனுபமாவிற்கு முக்கிய படமாக அமைந்தது. அதன் பிறகு அவருக்கு வந்த பல படவாய்ப்புகளில் கதாநாயகனுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சிகள் மற்றும் முத்தக்காட்சிகள் இருந்ததால் அப்படங்களை ...
ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்!

ஆஸ்கர் தகுதி பட்டியலில் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்றான ஆஸ்கர் விருது பட்டியலில் சூர்யா நடித்து ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ஜெய்பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேந்தெடுக்கப்படும். டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படம், 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது...
விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா

விவாகரத்து பதிவை நீக்கிய சமந்தா

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து விவாகரத்து பதிவை நீக்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் பிரபல தெலுங்கு நடிகரும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களது திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த சமந்தா அடுத்தடுத்து வெற்றிப் படங்களையும் கொடுத்தார்.   இதனிடையே சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே நேரத்தில் விவாகரத்து முடிவை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டனர். தங்கள் இன்ஸ்டாகிராம் பதிவில், "நீண்ட ஆலோசனைக்கு பிறகு, எங்கள் சொந்த பாதையை தொடர நானும், சைதன்யாவும் பிரிகிறோம். 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்பைப் பெற்றிரு...
தனுஷின் சர்ச்சை பெற்றோர் ரஜினிக்கு வைத்த திடீர் கோரிக்கை!

தனுஷின் சர்ச்சை பெற்றோர் ரஜினிக்கு வைத்த திடீர் கோரிக்கை!

CINI NEWS, HOME SLIDER, செய்திகள், நடிகர்கள்
  நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ஆகியோர் இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பிறகு பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களை சமாதானம் செய்து வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கஸ்தூரி ராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தனுஷ் தங்கள் மகன்தான் என்று சில வருடங்களுக்கு முன்பு புகார் கொடுத்த மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த தம்பதியினர் கதிரேசன் மற்றும் மீனாட்சி ஆகியோர், தனுஷ்-ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று ரஜினிக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். தற்போது சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வாழ்ந்து வரும் அவர்கள் தனுஷ் காணாமல்போன தங்கள் மகன் கலையரசன்தான் என்று தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த கோரிக்கையின் மூலம் தனுஷ் யாருடைய மகன் என்ற சர்ச்சை மீண்டும் சூடு பிடித்துள்ளது....
ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    ராஜமவுலி இயக்கத்தில், ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் ஜனவரி 7ம் தேதி வெளியாக இருந்தது. கொரோனா ஒமைக்ரான் அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டும் அனுமதித்தால் படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைத்தனர். இன்னிலையில் இப்படத்தை மார்ச் 18ஆம் தேதி அல்லது ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை!

HOME SLIDER, நடிகைகள்
    தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. விஜய், அஜித், கமல், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தற்போது வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் கைவசம் கா, பிசாசு 2 போன்ற படங்கள் உள்ளன. இவர் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் பாத்ரூம் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதே போல குளிக்கும் போது கூட போட்டோ எடுக்கனுமான்னு ஒரு பக்கம் ஆண்ட்ரியாவை கழுவி ஊற்றும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்....
வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
    வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது. யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் எப்போதாவது நடக்கும். இது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறினர். 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றது. இப்போது வடக்கு கென்யாவில் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது....