”எனக்கு அரசியல் கற்றுக்கொடுத்தது நீங்கள்தான்” அமேதியில் ராகுல் காந்தி
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே களப்பணியாற்ற தொடங்கிவிட்டன. பிரதமர் மோடி தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். பாஜகவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் அதிரடி காட்டி வருகிறது.
அவ்வகையில், விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக அமேதியில் இன்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த பேரணியில் ராகுல் காந்தி எம்பி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் உத்தரபிரதேச மாநில தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பேரணியில் பங்கேற்ற தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசுகையில், ‘அமேதியில் உள்ள ஒவ்வொரு பாதையும் இன்னும் அப்படியே உள்ளது. ஆனால், மக்கள் பார்வையில் அரசாங்கத்தின் மீதான கோபம் மட்டுமே உள்ளது’ என்றார்....









