சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை, கரூர், நமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும், கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் சில இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்....
அல்லு அர்ஜுனின் புஷ்பா பரபரப்பு

அல்லு அர்ஜுனின் புஷ்பா பரபரப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள்
  *'புஷ்பா: தி ரைஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு!* இந்த ஆண்டின் எதிர்பார்ப்புமிக்க படங்களில் ஒன்றாக, ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் படைப்பாக வெளிவரும் படம் 'புஷ்பா: தி ரைஸ்’. ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா இணைந்து 'புஷ்பா : தி ரைஸ்' பாகம் - 1 தயாரித்துள்ளனர். லைகா புரடக்சன்ஸ் இப்படத்தை இணைந்து வழங்குகிறது. இத்திரைப்படத்தின் பெரும் பகுதி தமிழகத்தில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இந்த அகில இந்திய திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஸ்ரீ லட்சுமி மூவிஸ் வெளியிடுகிறது. டிசம்பர் 17- ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்பதிப்பின் முன்வெளியீட்டுக்காக தம...
ஜெயில் விமர்சனம்

ஜெயில் விமர்சனம்

HOME SLIDER, REVIEWS, விமர்சனம்
  அம்மா ராதிகாவுடன் சென்னையில் வசித்து வருகிறார் ஜிவி பிரகாஷ். இவருக்கு நந்தன் ராம் மற்றும் பாண்டி என்று இரண்டு நண்பர்கள். திருடுவதை தொழிலாக வைத்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஒரு பிரச்சனையில் நண்பன் நந்தன் ராமை இழக்கிறார். மேலும் மற்றொரு நண்பர் பாண்டி ஜெயிலுக்கு சென்று விடுகிறார். தன் இரண்டு நண்பர்கள் இல்லாமல் தவிக்கும் ஜி.வி.பிரகாஷ் அவர்களின் குடும்பத்திற்கு உதவ நினைக்கிறார். இறுதியில் திருட்டு தொழிலை கைவிட்டாரா? நண்பனை ஜெயிலில் இருந்து மீட்டாரா? நண்பரை இழக்க காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. அசல் சேரி பகுதி கர்ணாவாக அசத்தியிருக்கிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ். இவரிடம் உள்ள நடிப்பு திறமையை இயக்குனர் வசந்தபாலன் கொண்டு வந்திருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக வட சென்னை பாஷையில் சிறப்பாக பேசி கவர்ந்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி சேரி பகுதி பெண்ணாகவே வாழ்ந்தி...
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்

உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய் உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார். துபாயில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன. இதன் 5ஆவது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்றவையாக மாற்றப்பட்டன. இதன்மூலம், உலகின் முதல் காகிதமில்லா அரசு என்ற பெருமையை துபாய் பெற்றுள்ளது. இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குகின்றன. இதுகுறித்து, எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் பயணம். இது ...
துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்த விஜய் சேதுபதி ஏன் தெரியுமா?

துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்த விஜய் சேதுபதி ஏன் தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், நடிகர்கள்
துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்த விஜய் சேதுபதி ஏன் தெரியுமா? துபாயில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற அரபு ராஜ்ஜியத்தின் 50ஆவது பொன்விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜய் சேதுபதி துபாயை தனது இரண்டாவது தாயகமாக உணருவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். துபாயில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அரபு ராஜ்ஜியத்தின் 50ஆவது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அரபு ராஜ்ஜியத்தின் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி விருதுகள...
ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், மற்றும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார்கள். மேலும் தமிழகத்தின் பல ஊர்களில் உள்ள ரஜினி ரசிகர்களும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.   இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். வீட்டில் மனைவி, மகள்கள், பேரன்கள் என அனைவருடனும் ரஜினி பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது....
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ்

மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ்

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள்
மிஸ் யுனிவர்ஸ் அழகி பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றது பெருமை தருகிறது- ஹர்னாஸ் பிரபஞ்ச அழகி பட்டத்தை 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு மீண்டும் பெற்று தந்திருப்பதை நான் மிக பெருமையாக கருதுகிறேன். பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும் ஹர்னாஸ் கவுருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. அவருடன் போட்டியில் பங்கேற்ற வெளிநாட்டு அழகிகள் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். இந்தியாவில் இருந்தும் நிறைய பேர் ஹர்னாஸ் கவுரை வாழ்த்தினார்கள். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. நான் இந்த பட்டம் வென்றதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனது பெற்றோர்களும், மிஸ் இந்தியா அமைப்பு நிர்வாகிகளும் எனக்கு வழி காட்டினார்கள். சர்வதேச போட்டியில் பங்கேற்க அனைத்து துறைகளிலும் என்னுடன் இருந்தவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தந்தனர். எனக்காக இலட்சக் கணக்கானவர்கள் பிரார்த்தனை செய்தனர். நான் பட்டம...
நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி

நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி

HOME SLIDER, NEWS, politics
நான் ஒரு இந்து, ஆனால் இந்துத்துவவாதி அல்ல -ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் பணவீக்கத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:- இந்து, இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையேயான போட்டியே நாட்டின் தற்போதைய அரசியல்.  இந்த இரண்டு வார்த்தைகளும் மாறுபட்ட அர்த்தத்தை கொண்டது.  நான் இந்து, ஆனால் இந்துத்துவவாதி கிடையாது. மகாத்மா காந்தி இந்து, ஆனால் கோட்சே இந்துத்துவவாதி. இந்தியா இந்துக்களின் நாடு. இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் அவர்கள் ஆட்சியில் இருக்கின்றனர்.  ஆட்சியை கைப்பற்றுவது குறித்தே இந்துத்துவவாதிகள் வாழ்நாள் முழுவதும் சிந்திக்கிறார்கள்.  அதிகாரத்தை தவிர அவர்கள் வேறு எதையும் விரும்புவதில்லை. அதை பெறுவதற்காக அவர்கள் எதையும் செய்வார...
மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை டி.ராஜேந்தர் வழக்கு …!

மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை டி.ராஜேந்தர் வழக்கு …!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை டி.ராஜேந்தர் வழக்கு ...!! நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார் பணப்பிரச்சினையால் குறிப்பிட்ட  தேதியில் மாநாடு படம் வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியதால் கொட்டும் மழையிலும் இரவு பகல் பாராமல் தானும், தனது மனைவியும் மாநாடு படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக  5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதம் அளித்ததாகவும் . ஆனால் தங்களிடம் சொல்லாமல் சாட்டிலைட் விற்பனை நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் இந்த வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையிய...
இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

இசைஞானியுடன் முதன்முதலாக இணையும் ரஞ்சனி & காயத்திரி

HOME SLIDER, சினி நிகழ்வுகள்
டபுள்மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ மாயோன்’ மிஸ்ட்ரி திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தை  அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் நடிகர்  சிபிராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மூத்த நடிகர் டத்தோ ராதாரவி, இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். கர்நாடக இசை உலகில் முன்னணி வாய்ப்பாட்டு கலைஞர்களாக இருக்கும் ரஞ்சனி & காயத்திரி ஆகிய இரட்டை கலைஞர்கள் முதன்முதலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் பின்னணி பாடியிருக்கிறார்கள். 'மாயோனே மணிவண்ணா..' எனத் தொடங்கும் அ...