சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

கோவிலுக்கு சென்ற மோகன்லால்… ஊழியர்கள் சஸ்பெண்ட்!

கோவிலுக்கு சென்ற மோகன்லால்… ஊழியர்கள் சஸ்பெண்ட்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கோவிலுக்கு சென்ற மோகன்லால்... ஊழியர்கள் சஸ்பெண்ட்! கேரளாவில் கொரோனா பரவல் மற்ற ஸ்டேட்டுகளைக் காட்டிலும் தீவிரமா இருப்பதால் கோயில்களில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, பிரசித்தி பெற்ற குருவாயூர் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பாதுகாப்பு கருதி கடந்த பல ஆண்டுகளாக குருவாயூர் கோயில் வளாகத்திற்குள் எந்த வாகனமும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரபல நடிகர் மோகன்லால் தனது மனைவியுடன் குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வந்தார். அப்போது, அவருடைய கார் கோயிலின் பிரதான நுழைவாயில் வரை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்களை கோயில் நிர்வாக ...
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... வைரலாகும் புகைப்படம்! தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தோழிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் யாஷிகா. மேலும் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவமனை...
நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்! தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகியுள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, நான் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறேன். இந்த மனுவில் யாதொரு உள்நோக்கமும், சுயநலமும் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன். கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் பேனர் முன்பு நடுரோட்டில் கொடூரமாக ஒரு ஆட்டை பட்டா கத்திக் கொண்டு வெட்டி பேனருக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. பொது இடத்தில், சாலையில், குழந்தைகள் பெண்கள் நடக்கும் இடத்தில் இதுபோன்...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் சாம்பியன்! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வதேவ் மற்றும் நோவக் ஜோகோவிச் விளையாடினர். இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்....
பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் – நேரில் சந்தித்த மோடி புகழாரம்!

பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் – நேரில் சந்தித்த மோடி புகழாரம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாரா ஒலிம்பிக் வீரர்களால் ஊக்கம் பெற்றேன் - நேரில் சந்தித்த மோடி புகழாரம்! ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் 19 பதக்கங்களை குவித்தனர். நாடு திரும்பிய 54 பேர் கொண்ட இந்திய அணி, பிரதமர் மோடி அழைப்பின்பேரில், கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு சென்றது. மோடியுடன் இந்திய அணி வீரர்கள் உரையாடினர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ, நேற்று பிரதமர் மோடியின்  அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிடப்பட்டது. பாரா ஒலிம்பிக் வீரர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:- உங்களின் விளையாட்டு செயல்பாடு பாராட்டத்தக்கது. பல்வேறு சிரமங்களை கடந்து சாதித்து இருக்கிறீர்கள். உங்கள் மனஉறுதியையும் பாராட்டுகிறேன். உங்கள் அனைவராலும் நான் ஊக்கம் பெற்றேன். உங்களது சாதனை, ஒட்டுமொத்த இந்திய விளையாட்டு வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். வளரும் விளையாட்டு ...
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து!

HOME SLIDER, NEWS, செய்திகள்
புதிய ‘நீட்’ வினாத்தாள் வடிவமைப்பு உதவியாக இருந்ததா?: மாணவ-மாணவிகள் கருத்து! மாணவ-மாணவிகளின் பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நீட் தேர்வு நடைபெறுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்பட்டு இருந்தாலும், மாணவ-மாணவிகளின் சுமையைக் குறைக்கும் வகையில் அனைத்து கல்வி வாரியங்களிலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருந்தன. அதை கருத்தில்கொண்டும், கொரோனா  தொற்றை மனதில் வைத்தும் தேசிய தேர்வு முகமை, நீட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பில் சிறிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, முன்பு இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து தலா 45 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு வினாவுக்கும் 4 மதிப்பெண் அடிப்படையில் மொத்தம் 720 (180x4) மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மேற்சொன்ன 4 பாடப்பிரிவுகளில் தலா 50 வினாக்கள் கேட்கப்பட்டு, ஒவ்வொரு பாடப்பிரிவுகளின...
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்!

கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்- ஓராண்டுக்கு அமலில் இருக்கும்! சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவர்ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடி சாலை சந்திப்பு வரை நடைபெற இருப்பதால், கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் 14-ந்தேதி (நாளை) முதல் ஒரு ஆண்டுக்கு அமல்படுத்தப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:- * போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை. * கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர்-சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவர்ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில், அசோக் நகர் போலீஸ் நிலையம் வரைசென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்பு வ...
நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

நீங்க இல்லாம துபாய் ரோடே வெறிச்சோடி கிடக்கு – வடிவேலுவை வாழ்த்திய பிரபல இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலு, தயாரிப்பாளர் சங்கம் விதித்த தடை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். தற்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு, ரீ-என்ட்ரிக்கு தயாராகி வருகிறார் வடிவேலு. அதன்படி சுராஜ் இயக்கும் படத்தில் முதலில் நடிக்க உள்ளார் வடிவேலு, இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் சேரன், நடிகர் வடிவேலுவுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “பிறந்தநாள் வாழ்த்துக்கள் வடிவேலு அய்யா.. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச்சந்துல இருந்து பேசுறேன்.. நீங்க மறு...
ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஜி.வி.பிரகாஷ் – கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஜி.வி.பிரகாஷ் - கவுதம் மேனன் முதன்முறையாக இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘செல்ஃபி’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடித்துள்ளார். மேலும் இயக்குனர் கவுதம் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்‌ஷன் கலந்து திரைக...
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சசிகுமாரின் ‘ராஜவம்சம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி உள்ளது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டீ.டி.ராஜா தயாரித்துள்ளார். கடந்த மார்ச் மாதமே ரிலீசாக இருந்த இப்படம் கொரோனா இர...