வெள்ளிக்கிழமை, மே 22
Shadow

HOME SLIDER

6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுக்கோடடை மாவட் டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் ராமையா.இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் முறையான அனுமதியுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஈடுபட்டு வருகிறோம். இந்த நிலையில் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்தோம். இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவிக்க மறுக்கின்றனர். எனவே மணலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க அனுமதிக்கவும், 6 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மணலை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி  மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக...
இந்தியாவில் 10 மருந்துகளில் ஒன்று போலியானது – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 10 மருந்துகளில் ஒன்று போலியானது – உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

HOME SLIDER, NEWS, செய்திகள்
  இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில்  10 மருந்துகளில் ஒன்று குறைபாடு உள்ளது அல்லது போலியானது என  உலக சுகாதார அமைப்பு (WHO) கூறி உள்ளது  அதாவது இந்த நாடுகளில் விற்பனை செய்யப்படும்  மருந்துகளில் 10.5 சதவீதமருந்துகள் போலியானவையாகும். உலக சுகாதார அமைப்பில் ஆய்வு அறிக்கை படி  இந்த மருந்துகள் நோய்களை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ தவறி விடுகின்றன.ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மலேரியா மற்றும் நிமோனியா போன்ற நோய்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் இறப்புகளுக்கு பொறுப்பாகவும் உள்ளது. தரக்குறைவான மற்றும் தவறான மருந்துகள் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்ட சமூகங்களை பாதிக்கின்றன,  என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அத்னோம் கெபிரேயஸ் கூறி உள்ளார். 2013 ஆம் ஆண்டிலிருந்துஉலக சுகாதார அமைப்பு தரக்குறைவான அல்லது போலியான  தயாரிப்புகள் குறித்த  1,500 அறிக்கை...
நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

நடிகை தீபிகா படுகோனே தலைக்கு ரூ 10 கோடி அறிவித்த பா.ஜ. பிரமுகர் பதவி ராஜினாமா

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள பத்மாவதி படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.இந்த படத்துக்கு வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியதால் டிசம்பர் 1–ந்தேதி திட்டமிட்டபடி படத்தை திரைக்கு கொண்டு வராமல் தள்ளிவைத்து விட்டனர். பத்மாவதி படம் வெளியானால் திரையிடப்படும் தியேட்டர் தீ வைத்து கொளுத்தப்படும் என அரியானா மாநில பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் சுராஜ் பால்  அமு கூறி இருந்தார்.  தீபிகா படுகோனே, படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் தலைகளுக்கு ரூ.10 கோடி பரிசும் அறிவித்தார் சுராஜ் பால்  அமு. பா.ஜ.க. ஊடகத் தலைவரின் இந்த கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து  குர்கானில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் சுராஜ் பால் அமு தனது பாரதீய ஜனதா செய்தி தொட...
கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் மன்னிப்பு கேட்ட படக்குழு..!

கார்த்தி படத்தின் சர்ச்சை காட்சிகள் நீக்கம் மன்னிப்பு கேட்ட படக்குழு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  கார்த்தி-ரகுல்பிரீத்சிங் ஜோடியாக நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வடநாட்டில் இருந்து வந்து கொலை-கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சென்னை புறநகர் பகுதிகளை கதிகலங்க வைத்த பவாரியா கொள்ளையர்கள் பற்றிய உண்மை சம்பவங்களை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. வினோத் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் குற்றப்பரம்பரை என்ற வார்த்தை இடம்பெற்று உள்ளது. இது குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுபடுத்துவதுபோல் உள்ளது என்று எதிர்ப்புகள் கிளம்பின. அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் வற் புறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சையை ஏற் படுத்திய காட்சிகள் நீக்கப்பட்டு உள்ளன.   இதுகுறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்த கொள்ளை சம்பவங்களை வைத்து மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டு உள்ளது. எந...
நீதிமன்றம் செல்லும் மருமகள்… கோபத்தில் சிவகுமார்…!

நீதிமன்றம் செல்லும் மருமகள்… கோபத்தில் சிவகுமார்…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், வீடியோ
  கரூர் நாச்சியார் பட விவகாரம் தொடர்பாக நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா ஆகியோர் மீது கரூர் கோர்ட்டில் இன்று மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த ட்ரைலரின் நடிகை ஜோதிகா கெட்ட வார்த்தை பேசிய காட்சி இடம்பெற்றது. https://youtu.be/bg3hJuBtE-8 இதற்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜன் மேட்டுப்பாளையம் ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை ஜோதிகா, இயக்குனர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா அவதூறாகவு...
மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!

மீண்டும் தள்ளிப்போன ரஜினியின் ‘2.0’ ….?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.0.’ ரூ.450 கோடி வரை செலவிடப்பட்டு உள்ளது. 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. கடந்த தீபாவளிக்கே படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படப்பிடிப்பு முடியாததால் தள்ளிப்போனது. ஜனவரி மாதம் 26-ந்தேதி குடியரசு தினத்தையொட்டி 2.0 திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி முடியாததால் மீண்டும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது. ...
பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

பெங்களூரு ஜெயிலில் சசிகலாவுடன் தினகரன் இன்று சந்திப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவை  டி.டி.வி.தினகரன் இன்று சந்தித்து பேச முடிவு செய்தார். இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரெண்டிடம் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை தினகரன் சென்னை பெசன்ட் நகரில் உள்ள வீட்டில் இருந்து காரில் பெங்களூரு புறப்பட்டார். பள்ளிகொண்டா, ஆம்பூர், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழி நெடுக அவருக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூரு சென்ற டிடிவி தினகரன் இன்று பிற்பகலில் சசிகலாவை சந்தித்து பேசினார்.  அவருடன் மருத்துவர் வெங்கடேஷ், இளவரசியின் மகன் விவேக், மருமகள் கீர்த்தனா, மகள் ஷகிலா, மருமகன் ராஜராஜன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். அவர்களுடன் புகழேந்தியின் வழக்கறிஞர் அசோகனு...
முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு

முன்ஜாமீன் கேட்டு பைனான்சியர் அன்புசெழியன் ஐகோர்ட்டில் மனு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
கந்துவட்டி கொடுமையால் திரைப்பட இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிக்குமாரின் நெருங்கிய உறவினருமான அசோக்குமார் கடந்த 21-ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் தனது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் ஜி.என்.அன்புசெழியன் தான் காரணம் எனக் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக மதுரை கீரைத்துரை மேலத்தோப்பைச் சேர்ந்த ஜி.என்.அன்புசெழியன்(வயது 50) மீது குற்றம் சாட்டி, அவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி ஐகோர்ட்டில் அன்புசெழியன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை இல்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. பி.அசோக்குமாருக்கும் எனக்கும் எந்தவித நேரடி தொடர்போ, மறைமுக தொடர்போ இல்லை. சசிக்குமார் ந...
அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

அதிக தொகைக்கு விலைபோன விஷாலின் `இரும்புத்திரை’

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
`துப்பறிவாளன்' படத்தை தொடர்ந்து விஷால் அடுத்ததாக, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் `இரும்புத்திரை' படத்திலும், லிங்குசாமி இயக்கத்தில் `சண்டக்கோழி-2' படத்திலும் நடித்து வருகிறார். இதில் விஷால் ஜோடியாக சமந்தா நடித்துவரும் `இரும்புத்திரை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், வின்சன்ட் அசோகன் மற்றும் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாகவும், அதனை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் கைப்பற்றி...
பைனான்சியர் அன்புச்செழியனை  ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  நம்பிக்கை நாணயம் அற்றுப்போனதா தமிழ் திரையுலகம்...! பைனான்சியர் அன்புச்செழியனை ஏமாற்றினாரா சிவி.குமார்..?! இரு கடன்... ஒரு செட்டில்மெண்ட்... தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நேர்மையான நடவடிக்கைகள் ஒழிந்துபோய் ஒருவரை ஒருவர் குற்றம்சுமத்தி குறை சொல்லி அடுத்தவர் பணத்தை ஏமாற்றி பிரபலம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ளும் அவலம் அதிகரித்து வருகிறது. சினிமா தொழில் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடந்து வந்த நிலை மாறி இப்போது நாக்கில் தேன் தடவி அந்த தேனில் விஷம் வைக்கும் அதிர்ச்சிகளும் அதிகரித்து வருகிறது. சரி விஷயத்துக்கு வருவோம்... பிரபல இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிக்குமார் மதுரையை சேர்ந்த அன்புச்செழியன் என்ற பைனான்சியரிடம் வாங்கிய கடனை திருப்பி தராத நிலையில் ‘பைனான்சியர் அன்புச்செழியன் மிக மோசமாக என்னை மிரட்டியதால் நான் தற்கொலை செய்கிறேன்’ என்று சசிக்குமாரி...