துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும், பெஜாய் நம்பியார் இயக்கத்தில் உருவாகி வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம் 'சோலோ'.
இப்படத்தின் தயாரிப்பாளர் அனில் ஜெயின் மற்றும் இயக்குனர் பெஜாய் நம்பியார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து 'சோலோ' படத்தின் ட்ரைலரை காண்பித்துள்ளார்.
அதனை பார்த்த சூப்பர் ஸ்டார் , ட்ரைலர் மிக அருமையாக இருப்பதாக கூறி மிகவும் பாராட்டியுள்ளார். இப்படத்தை உருவாக்கியதற்காக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் பாராட்டியுள்ளார்.
இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் 'சோலோ' படத்திற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் . சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டுக்கள் 'சோலோ' அணியினரை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது....
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு மீண்டும் காந்தி ஜெயந்தி மேஜிக்கை அதே நாளில் நிகழ்த்தும் விஜய்சேதுபதி - கோகுல் கூட்டணி
சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்கைகோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்த...
தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளவர் விஷ்ணு மஞ்சு. பிரபல நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு..
இவர் தமிழில் முதன் முறையாக அறிமுகமாகும் படம் " குறள் 388"
தமிழ் தெலுங்கு எனஇரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது..
தமிழில் குறள் 388 என்றும் தெலுங்கில் "வோட்டர்" என்றும் பெயரிடப்பட்டுள்ளது
விஷ்ணு மஞ்சு ஜோடியாக சுரபி நடிக்கிறார்.
மற்றும் சம்பத் ராஜ்,போசானி கிருஷ்ண முரளி,நாசர் பிரகதி,முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், L.B.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கடைசி பெஞ்ச் கார்த்தி, காட்சி நேரம் ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கிறார்.
இசை - s.s.தமன்
வசனத்தை பத்திரிக்கையாளர் ரவிசங்கர் எழுதுகிறார்.
ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ்
கலை ...
????இன்று நடிகர் திலகத்தின் 91 ஆம் பிறந்த தினம்???? ....ஒரு வித்தியசமான நினைவு கூறல் .????
????மறைந்த தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் ✍????
✍????ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
????சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
✍????ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க ...
மீராகதிரவன் இயக்கிய விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை பேசும் போது சொல்ல மறந்து விட்டார் என நடிகை தன்ஷிகாவை அதே மேடையில் டி.ராஜேந்தர் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.
நடிகை தன்ஷிகா மன்னிப்பு கேட்டும் இயக்குனர் டி.ராஜேந்தர் தொடர்ந்து தன்ஷிகாவை விமர்சித்ததால் அவர் அழுது கொண்டே மேடையில் இருந்து இறங்கி போனார்.
இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை டி.ராஜேந்தருக்கு ஏற்படுத்தி உள்ளது. மேடை நாகரீகம் பற்றி பேசும் டி.ஆர். நாகரீகமே இல்லாமல் நடந்து கொண்டார் என்றும் டி.ஆர்.வருத்தம தெரிவிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளர் விஷால் வெளியிட்ட அறிக்கை:
ஒரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்ம...
????கேளிக்கை வரி அதிகரிப்பு குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் செய்தியாளர் சந்திப்பு செய்தி
????அரசு மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இடையே பல சந்திப்புகள் நடைபெற்றது.அதில், கேளிக்கை வரி வேண்டாம் என்று சொன்னோம், அதற்காக பல முறை அரசிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது
தற்போது, இந்த வரி விதிப்பு மிகுந்த அதிரிச்சி தரக்கூடியதாக உள்ளது .விரைவில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நடைபெற உள்ளது.பிற மாநிலங்களில் உள்ளது போல இங்கும் வரி விதிப்பு இருக்க வேண்டும்.100 சதவீதம், டிக்கெட் விற்பனை கணினிமயமாக்கப்படவேண்டும் என்றும் அதை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். தமிழ் சினிமா லாபத்தில் கொடிகட்டி பார்க்கவில்லை எல்லா படமும் பாகுபலி படம் அல்ல.திருட்டு தனமாக படங்கள் வெளி வருவதை அரசு 100% தடுக்க முடியுமா ?? அதற்கான உத்திரவாததை அரசு தந்தால் நாங்கள் இந்...
தமிழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசியல் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளையும், கடமைகளையும் தமிழக மக்களின் நலன் கருதி சுதந்திரமாகவும், நடுநிலையோடும் நிறைவேற்றுவார் என்று உளமார நம்புவதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட அறிக்கையில், "
அறிக்கையில், "தமிழகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசியலிலும், தமிழக சட்டமன்றத்திலும் மாநிலத்தின் பொது நலன்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ள நேரத்தில், தமிழகத்திற்குப் பொறுப்பு ஆளுநர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருந்ததால், மாநில அரசு நிர்வாகத்தின் ஸ்திரத்தன்மை முற்றிலும் சிதைக்கப்பட்டு, ...
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.
இவர் நாளைய இயக்குநர் சீஸன்=3 இல் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை ’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அற...