வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி!

ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஒற்றை வார்த்தையில் நடிகர் விஜய்யை புகழ்ந்த ‘பீஸ்ட்’ நாயகி! நடிகை பூஜா ஹெக்டே, கடந்த 2012-ம் ஆண்டு, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து பிரபலமான அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, அண்மையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், விஜய் குறித்து ஒரு வார்த்தையில் கூறுமாறு கேட்டார். இதற்கு பதிலளித்த பூஜா ஹெக்டே, “அவரைப் பற்றி கூற ஒரு வார்த்தை போதாது. இருந்தாலும் முயற்சி செய்கிறேன்...
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா எடுத்த அதிரடி முடிவு! நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்துக்கு பிடிக்கவில்லை என்றும் இதனாலேயே திருமண உறவை முறித்துக் கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்திருந்த சமந்தா, விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள அவர், தற்போது மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று பாலிவுட் படம். அவர் நடிக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். மேலும் அவர் நடிக்க உள்ள மற்ற இரண்டு படங்களும் சமந்தாவை முன்னிலைப்படுத்தி கதாநாயகிக்கு...
‘டெடி’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

‘டெடி’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘டெடி’ இயக்குனருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்! ஆர்யா, சாயிஷா நடிப்பில் கடந்த மார்ச் மாதம் ஓடிடியில் வெளியான படம் ‘டெடி’. சக்தி சவுந்தரராஜன் இயக்கியிருந்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். இப்படத்தில் இடம்பெறும் டெடி என்கிற பொம்மை கதாபாத்திரம் குழந்தைகள் ரசிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்ததால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. விரைவில் இப்படத்தின் 2-ம் பாகமும் உருவாக உள்ளது. இந்நிலையில், டெடி படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தரராஜனுக்கு, தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். டெடி படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் சக்தி சவுந்தரராஜன், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு நன்றி தெரிவித்து...
மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி!

மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
மாவட்ட, ஒன்றியங்களின் தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க.வில் கடும் போட்டி! தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்க உள்ளனர். இதையடுத்து மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதே தினத்தில் ஒன்றிய பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது. பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் 9 மாவட்டங்களிலும் தி.மு.க. பெரும்பான்மையான இடங்களில்...
சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’ படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’ படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’ படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்! தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். மேலும் யோகிபாபு, கௌரி கிஷன், லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக் குவித்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் பெற்றது. இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக...
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்!

ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹாலிவுட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ்! தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். சமீபத்திய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார். ஏற்கனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் அ...
போட்டிபோட்டு அப்டேட் வெளியிட்ட ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படக்குழு!

போட்டிபோட்டு அப்டேட் வெளியிட்ட ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
போட்டிபோட்டு அப்டேட் வெளியிட்ட ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படக்குழு! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்துக்கு போட்டியாக சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரிலீசாக உள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 2-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், ‘ஜெய் பீம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படக்குழுவினர் அடுத்தடுத்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரண்டு படங்களின் டீசர் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி ‘ஜெய் பீம்’ படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். ஷான் ரோல்டன் இ...
விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை!

விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
விண்வெளியில் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி ரஷ்ய படக்குழு சாதனை! ஹாலிவுட்டில் விண்வெளியை மையமாக வைத்து கிராவிட்டி, இன்டர்ஸ்டெல்லர் போன்ற பல படங்கள் வெளிவந்திருக்கின்றன. முதன் முறையாக விண்வெளிக்கே சென்று ஒரு படத்தை எடுத்திருக்கிறார்கள் ரஷ்ய படக்குழுவினர். இந்தப் படத்தை கிலிம் ஷிபென்கோ இயக்குகிறார். கதைப்படி ஆய்வுக்காக விண்வெளிக்குச் செல்லும் ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு இதயப் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது. அவரை காப்பாற்ற பூமியிலிருந்து ஒரு மருத்துவர் செல்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள் தான் படத்தின் கதை. இப்படத்திற்கு ‘தி சேலஞ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகை யுலியா பெரெசில்ட், இயக்குனர் கிளிம் ஷிப்பென்கோ மற்றும் அவர்களின் உதவிக்காக விண்வெளி வீரர் அன்டன் ஷகாப்லெரோவ் ஆகியோர் கடந்த 5-ந் தேதி கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் நகரில் இருந்து ‘சோயு...
அது உண்மையல்ல… வதந்தி – ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்!

அது உண்மையல்ல… வதந்தி – ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அது உண்மையல்ல... வதந்தி - ‘தர்மதுரை’ இரண்டாம் பாகம் குறித்து சீனு ராமசாமி விளக்கம்! சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்ற படம் ‘தர்மதுரை’. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். தர்மதுரை படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது. ஆர்.கே.சுரேஷ் இப்படத்தை தயாரித்திருந்தார். இதனிடையே தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து இப்படத்தை சீனுராமசாமி இயக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்து இயக்குனர் சீனு ராமசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மதுரை பாகம் இரண்டு எடுக்கப் ...
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி மற்றும் வீடுகளில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திருவேங்கைவாசல் பகுதியிலுள்ள அவரது குவாரி மற்றும் வீடுகளில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்த காலத்தில் மனைவி, மகள்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போது ரூ. 6.41 கோடி சொத்து இருப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச...