ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

சாத்தான்குளம் கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

சாத்தான்குளம் கொலைக்கு காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாத்தான்குளம் கொலையில் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயன்ற அ.தி.மு.க அரசின் அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் தலையீட்டினால் சட்டத்தின் முன் வளைக்கப்பட்டதை வரவேற்கிறேன். குடும்பத்தின் கண்ணீர், மக்கள் போராட்டம், கடையடைப்பு, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள், நீதிமன்றம், ஊடகங்கள் என அனைத்து தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டு அதிமுக அரசு சிக்கிக்கொண்டது. இந்த வழக்கில் சிலரைக் கைது செய்துவிட்டு, அனைவரது வாயையும் மூடிவிடலாம் என்று அரசு தப்புக்கணக்கு போட்டுவிடக் கூடாது. அனைத்து தரப்பினரும் கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள். கொலைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்ட வேண்டும். மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங...
அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!

அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அப்பா-மகன் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சி சொன்ன பெண் போலீசுக்கு போலீஸ் பாதுகாப்பு! சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தந்தை மகன் கொலை வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இதையடுத்து நீதிமன்றத்தில் 5 காவலர்களை கைது செய்தது எப்படி என்று சிபிசிஐடி போலீசார் விளக்கம் அளித்தனர். முன்னதாக வியாபாரி-மகன் பரிதாபமாக அடித்து கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியம் அளித்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, “எனக்கும் - குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று உருக்கமுடன் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   இன்று சாத்தான்குளம் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிள...
சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றார் மகேஷ்குமார் அகர்வால்!

சென்னை போலீஸ் கமிஷனராக பதவி ஏற்றார் மகேஷ்குமார் அகர்வால்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்ய விரும்புகிறேன். கரோனா பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். அவசியம் ஏற்படும் போது வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் வலியுறுத்தினார். மேலும், கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் செல்லிடப்பேசியில் காணொலி வாயிலாகவே பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் நாள்தோறும் அல்லது வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் என்னிடம் நேரடியாகவே புகார் அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும் என்ற...
ஊர் ஊராக காரில் தப்பிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது கொலைவழக்கு பதிவு!

ஊர் ஊராக காரில் தப்பிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது கொலைவழக்கு பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஊர் ஊராக காரில் தப்பி ஓடிய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை சினிமா பாணியில் CBCID போலீசார் சேசிங் செய்து பிடித்து இருக்கிறார்கள். அப்பா,மகன் இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே இவர் மீது உறவுக்கார பெண்ணை கொல்ல முயன்ற கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளம் அப்பா, மகன் இரட்டை படு கொலை வழக்கு சூடு பிடித்து உள்ளது. - கோடங்கி...
சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் முக்கியமான சாட்சியாக அரசு டாக்டர் அதிர்ச்சி  வாக்குமூலம்!

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் முக்கியமான சாட்சியாக அரசு டாக்டர் அதிர்ச்சி வாக்குமூலம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் அரசு டாக்டர் வெண்ணிலா மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்! சாத்தான்குளத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் அடுத்தடுத்து மரணம் அடைந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. இருவரும் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் மற்றும் பொது மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய அடித்ததாக மாஜிஸ்திரேட்டின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தததால், சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில்  சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமார் விசாரணை செய்தார். ஜெயராஜ் கடை அமைந்துள்ள பகுதியிலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். இந்த சூழலில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் வெண்ணிலா, மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முன்பு ஆஜரானார். 15 நாள் ...
சாத்தான்குளம் இரட்டை கொலை… ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு!

சாத்தான்குளம் இரட்டை கொலை… ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      சாத்தான்குளம் இரட்டை கொலையில் 6 பேர் மீது வழக்கு ஒரு எஸ்.ஐ கைது ஒரு எஸ்.ஐ தலைமறைவு.. சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் குறித்து சிபிசிஐடி உடனடியாக விசாரணை தொடங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று சிபிசிஐடி பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் எஸ்.ஐ. ரகு கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். காவலில் உயிரிழப்பு என்றிருந்ததை பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்தது சிபிசிஐடி. சம்பவம் தொடர்பான 2 முதல் தகவல் அறிக்கைகளிலும் கொலை வழக்காக பதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் போலீசார் மகாராஜன், முருகன் உட்பட 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக எஸ்.ஐ.  ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார். இன்னொரு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தப...
தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராத தொகை ரூ.16 கோடியை தாண்டியது!

தமிழகத்தில் ஊரடங்கை மீறியவர்களிடம் வசூலித்த அபராத தொகை ரூ.16 கோடியை தாண்டியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் 98 நாட்களில் 7,77,601 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் அபராதமாக ரூ. 16கோடியே 42 லட்சத்து 16 ஆயிரத்தி105 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது* கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியம் இன்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளடக்கிய சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து அவர்களை கட்டுப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்...
கொரானா ஊரடங்கில் போன வாரம் பாகுபலி நடிகை இந்தவாரம் தாதா87 தயாரிப்பாளர் மது கடத்தலில்…

கொரானா ஊரடங்கில் போன வாரம் பாகுபலி நடிகை இந்தவாரம் தாதா87 தயாரிப்பாளர் மது கடத்தலில்…

CINI NEWS, HOME SLIDER
  போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் மது பாட்டிகள் கடத்திய சாருஹாசனின் தாதா87 பட தயாரிப்பாளர் கைது! கொரானா ஊரடங்கு நேரத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவோ மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சென்னையின் பல பகுதிகளில் கடுமையான வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சென்னை மதுரவாயல் அருகே சென்னை நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் வாகன சோதனைக்கு நிறுத்தினர். கார் முகப்பில் போலீஸ் என ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டு இருந்தது. இருந்த போதும் காரில் வந்தவர்களிடம் உரிய ஆவணங்களை கேட்டபோது இ பாஸ் உள்ளிட்ட எந்த அனுமதி சீட்டும் இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து காரை சோதனை செய்த போலீசுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கார் பின்சீட்டிலும், கார் டிக்கியிலும் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருந்தது. இதையடுத்து போலீஸ் விசாரணையில் காரில் ...
சிபிஐ விசாரணையை கையில் எடுப்பதற்குள் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது – கோர்ட் சந்தேகம்

சிபிஐ விசாரணையை கையில் எடுப்பதற்குள் ஆதாரங்களை அழிக்க அதிக வாய்ப்பு உள்ளது – கோர்ட் சந்தேகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று முன் தினம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையின்போது காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும், வழக்கு ஆவணங்களை தர மறுத்ததாகவும் கூறி நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மின்னஞ்சல் வாயிலாக புகார் அளித்திருந்தார். காவல் அதிகாரிகளை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது என காவலர் மகாராஜன் அவதூறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மூன்று காவலர்களையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில், கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்ப...
CBI விசாரிக்கும்வரை சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோர்ட் உத்தரவு

CBI விசாரிக்கும்வரை சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க கோர்ட் உத்தரவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவர் அளித்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். “இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. சிபிஐ விசாரணையை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை, நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று மதியம் தெரிவிக்க வேண்டும். முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்...