ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம்  விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம் விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இந்திய அளவில் 2019-ம் ஆண்டில் டாப் 100 இடங்களில் உள்ள பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் டாப் 100 இடங்களை பிடிக்கும் பிரபலங்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் தோனி 5-வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இந்தியா வரலாற்றில் ஒரு கிரிக்கெட் வீரர் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் (30வது இடம்), ஹர்திக் பாண்டியா (3...
ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது.* *கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒருபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு.* * கரை ஒதுங்கி உள்ள ஏவுகணையின் பாகம் பெரிய பந்து வடிவில் உள்ளது.*
திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

திருநங்கை ஆக ரஜினி நடிக்க கதை ரெடி – தாதா87 இயக்குனர் விஜய்ஸ்ரீஜி டிவீட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தர்பார் ஆடியோ விழாவில் பேசும்போது "திருநங்கை வேடத்தில் நடிக்க ஆசை" என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில் கதாநாயகியை திருநங்கை ஆக சித்தரித்து தாதா87 என்ற பெயரில் படமெடுத்து பரபரப்பாக பேசப்பட்ட இயக்குநர் விஜய்ஸ்ரீஜி தனது டிவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கவனத்திற்கு என ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். அதில் தர்பார் ரிலீசுக்கு முன் நேரம் இருந்தால் தனது இயக்கத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட தாதா87 படத்தை ரஜினிகாந்துக்கு திரையிட்டு காட்ட விரும்புவதாகவும், அவர் ஆசைப்படியே அழகான திருநங்கை கதை ஒன்று இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில் படம் இயக்க வேண்டும் என பல இயக்குனர்கள் காத்திருக்கும் போது ரஜினி ஆசையை நிறைவேற்ற தன்னிடம் நல்ல கதை இருக்கிறது அதை நிரூபிக்க ஏற்கனவே ஒரு அழகான படத்தையும் இயக்கி ரிலீஸ் செய்திருக்கிறேன் என இயக்குனர் விஜய்ஸ்ர...
செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

செங்குட்டுவன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கும் “பேட்டரி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  செங்குட்டுவன் ஜோடியாக தனுஷ் பட நாயகி அம்மு அபிராமி நடிக்கிறார். மணி பாரதி இயக்கும் “பேட்டரி “ . ஶ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்கும் புதிய படம் “பேட்டரி”. மணி பாரதி கதை எழுதி இயக்கும் இப்படத்தில் செங்குட்டுவன் நாயகனாக நடிக்க, தனுஷின் “அசுரன்” படப்புகழ் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மணிபாரதி கூறியதாவது... பொதுவாகவே நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் கதையும் பரபரப்பாக அமைந்துள்ளது. உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் ஏழைகளாக இருக்கிறார்கள். அப்படி வறுமை கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களுக்கு மருத்துவம் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. அப்படிப்பட மருத்துவ துறைய...
விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அணைத்து ஊராட்சிகளிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுமார் 5000 வாக்குகள் கொண்ட இந்த ஊராட்சியில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்துவருகின்றனர். கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி நான்கு முறையும், இவர்களது மகன் பார்த்தசாரதி இரண்டுமுறையும் தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது போட்டியிடும் கனகவல்லியும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். தற்போது இந்த தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தலைவர் பதவிக்கு போ...
50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

50 பைசா நிலுவைத் தொகை நோட்டீஸ் – SBI அட்ராசிட்டி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ராஜஸ்தானில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர் ஒருவருக்கு 50 பைசா நிலுவை தொகையை கட்ட சொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு பகுதியை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவர் அந்த பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஜன்தன் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கியுள்ளார். நீண்ட நாட்களாக கணக்கில் பண புழக்கம் ஏதும் செய்யாமல் இருந்த நிலையில் ஜிதேந்திர குமாருக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அந்த அறிவிப்பில் ஜிதேந்திர குமார் வங்கி கணக்கில் 50 பைசா நிலுவை தொகை செலுத்த வேண்டியது இருப்பதாகவும், உடனடியாக அதை செலுத்தாத பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டு ஜிதேந்திரகுமார் மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஜிதேந்திரகுமாரின் 50 பைசா நிலுவை தொகையை கட்ட சென்ற அவரது தந்த...
திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்* *மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப்* தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர்...
பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிஜேபி கட்சியில் ஐக்கியம் ஆக ஜீவஜோதி முடிவு..! சென்னையில் மிக பிரபலமாக இருக்கும் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்தவர் ஜீவஜோதி. தன் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல ஆண்டுகளாக கடும் சட்டப் போராட்டங்களை நடத்தி தீர்ப்பு வாங்கியவர். ராஜகோபால் மறைவுக்கு பின் இவரைப்பற்றி தகவல் எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போது இவர் விரைவில் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகவும் முக்கியப் பதவி கிடைக்க இருப்பதாகவும் தகவல் ஒன்று பரவி உள்ளது. இதற்கிடையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் , ஜீவஜோதியை சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து, சென்னையில் வானதி சீனிவாசனைச் சந்தித்துப் பேசினார் ஜீவஜோதி. கருப்பு முருகானந்தம் ஒரு வகையில் கணவர் சாந்தகுமார் வழியில் உறவுக்காரர். அதனால் அவர் ஆலோசனைப்படி ...
ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் அழகு தேவதை..!

ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறிய பிக்பாஸ் அழகு தேவதை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
    தமிழ் திரை உலகில் தொடர்ந்து நாயகிகள் ஆதிக்கம் செலுத்தும் காலக் கட்டம் இது. Holly wood மற்றும் ஹிந்தி திரைப் படங்களின் பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் பட்டு வரும் படங்களின் எண்ணிக்கை தமிழ் திரை உலகில் வெகுவாக வளர்ந்து வருகிறது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப் படும் இந்த வகை படங்கள் பெரும்பாலும் action படங்களே. பிக் பாஸ் சீசன் 3 மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற சாக்ஷி அகர்வால் பெயரிடப் படாத ஒரு புதிய படத்தின் மூலம் action அவதாரம் எடுக்க இருக்கிறார். "களிறு" என்ற படத்தை இயக்கிய ஜி ஜே சத்யா இயக்கும் இந்தப் படத்துக்காக சாக்ஷி சிறப்பு சண்டை பயிற்சிகள் மேற்கொண்டு வருவது குறிப்பிட தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள பெயரிடப்படாத இந்த படத்தை பற்றி இயக்குனர் ஜி ஜெ சத்யா கூறியதாவது " பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாக்ஷி பல்வேறு சந்தர்ப்பங்க...
“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

“சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சூர்யாவின் 2D Entertainment வழங்கும் “சில்லுக்கருப்பட்டி” சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சிறப்பு வெளியீடு ! நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட்டின் அடையாளம் மூலம் அறிமுகமாகும் போது அதன் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது. ஒரு படைப்பாளியின் படைப்பு சரியான முறையில் மார்கெட்டிங் செய்யப்பட்டு, பெருமளவு மக்களை சென்றடைந்து,வெற்றி பெறும் போது தான் அவனது படைப்புலகம் பூரணத்துவம் பெறுகிறது. கடந்த சில வருடங்களில் மிக நல்ல கருத்துக்கள் கொண்ட படங்கள் மிக பெரிய நிறுவனத்தின் அடையாளத்துடன் வெளியாகி பெரு வெற்றியை அடைந்து வந்துள்ளது. ஒரு சிறு டீஸர் மூலமாகவே இணைய உலகின் கவனம் ஈர்த்த படம் “சில்லுக்கருப்பட்டி”. இத்திரைப்படத்தின் உரிமையை சூர்யா வின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ( 2D Entertainment ) வாங்கியிருப்பது இப்படத்தின்மீது பன்மடங்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலு...