வியாழக்கிழமை, நவம்பர் 12
Shadow

HOME SLIDER

சிவாஜி பேரன் – சுஜா வருணி காதல் நவம்பரில் திருமணம்

சிவாஜி பேரன் – சுஜா வருணி காதல் நவம்பரில் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் காதலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார். இந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவரு...
கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது. இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் ச...
96, நோட்டா ரிலீசால் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை – தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

96, நோட்டா ரிலீசால் போதுமான திரையரங்குகள் கிடைக்கவில்லை – தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
தமிழ் திரையுலகில் புதிய படங்களை திரையிடுவதில் ஒழுங்கற்ற நிலை இருந்தது. பெரிய படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் சிறு பட்ஜெட் படங்களை வெளியிடுவதில் சிரமங்கள் இருந்தன. அந்த படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் மாதக்கணக்கில் முடங்கின. இந்த குளறுபடிகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் படங்களை வெளியிடுவதில் புதிய வரைமுறைகளை வகுத்தது. ஒவ்வொரு படத்துக்கும் சங்கமே தேதிகளை வெளியிட்டு ஒதுக்கி கொடுத்தது. இதன்படி வாரத்துக்கு 2, 3 படங்கள் திரைக்கு வந்தன. பெரிய நடிகர்கள் படங்களை வாரத்தின் முதல் இரண்டு வாரத்திலும், கடைசி வாரத்திலும் திரையிட தேதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளதால் அந்த படங்களை வெளியிடுவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த வாரம் 5-ந் தேதி உதயா நடித்துள்ள உத்தரவு மகாராஜா, சமுத்திரக்கனியின் ஆண்தேவதை, ஜெய் நடித்துள்ள ஜ...
96ல் நடக்கும் ஒரு காதல் கதையாம் விஜய் சேதுபதி- த்ரிஷாவின் 96..!

96ல் நடக்கும் ஒரு காதல் கதையாம் விஜய் சேதுபதி- த்ரிஷாவின் 96..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  96 படத்தின் டைட்டில் ஒரு கதை சொல்கிறது 96 நடக்கும் ஒரு காதல் கதையாம் அது தான் 96 என்ற டைட்டில் வைத்து இருக்கிறார் இயக்குனர் பிரேம்குமார் இவருக்கு இது முதல் படம் அனால் ஒளிபதிவாளராக பல வெற்றி படங்களை பணிபுரிந்தவர். இவரின் இயக்கத்தில் வரும் முதல் படைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதியை தவிர எல்லோரும் த்ரிஷாவை காதலிப்பதாக சொன்னார்கள். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா நானும் த்ரிஷாவை காதலித்தேன் அனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி- த்ரிஷா காதல் எல்லாத்தையும் மறைத்து விட்டது அந்த அளவுக்கு ஒரு நேர்த்தியான நடிப்பை விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கொடுத்துள்ளனர் பார்க்கும் அனைவரையும் மிகவும் ரசிக்கவைக்கும் உண்மையான காதலர்கள் கண்ணில் நிச்சயம் கண்ணீர் கசியும் .  ...
இயக்கி நடிக்கும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி

இயக்கி நடிக்கும் படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கிறார். இது குறித்து அதிதி கூறியிருப்பதாவது, நான் ஏற்கனவே ஒரு படத்தில் தனுஷுடன் நடிப்பதாக இருந்தது. ஆனால் டேட்ஸ் பிரச்சனையால் அது முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது பெரிய படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றுவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் அதிதி. தனுஷ் ஒரு நல்ல நடிகர். அவருக்கு நடிகர்களை நன்றாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் சிறப்பான இயக்குனராக உள்ளார். தனுஷ் இயக்கும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் எடுக்கப்படுகிறது. எனக்கு இரண்டு மொழிகளுமே அவ்வளவாக பேச வராது. அது தான் எனக்கு முன்பு இருக்கும் சவால் என்று அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.  ...
இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்… பலி உயரும் அபாயம்..!

இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம், சுனாமி தாக்குதல்… பலி உயரும் அபாயம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்தோனேசியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை மத்திய பகுதியில் உள்ள பாலு நகரில் 7.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட சிறிது நேரத்தில் கடலோரப்பகுதிகளில் சுனாமி தாக்கியது. சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு எழுந்த பேரலைகள் கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகள் சுனாமி பேரலையில் சிக்கி இடிந்து விழுந்தன. ஏராளமானோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் இந்நிலையில், இன்று பிற்பகல் நிலவரப்படி நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்ததாக அந்நாட்டின் ப...
ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் – சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்

ஆந்திராவில் மகாத்மா காந்திக்கு கோயில் – சந்திரபாபு நாயுடு திறந்து வைக்கிறார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக போராடி இந்தியாவுக்கு விடுதலை பெற்றுதந்த தேசப்பிதா மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவருக்கென கோயில் ஏதும் உருவாக்கப்படவில்லை. இந்நிலையில், ஆந்திர மாநிலம், பழைய விஜயவாடா நகரில் உள்ள சய்யாட் அப்பாலா சுவாமி கல்லூரி வளாகத்தில்  மகாத்மா காந்திக்கு எழுப்பப்பட்டுள்ள கோயிலை திறந்து வைத்து சிறப்பிக்குமாறு இந்த கோயிலை நிர்மாணித்த சுதந்திரப் போராட்ட தியாகி உப்புலுரி மல்லிகார்ஜுனா சர்மா என்பவர் ஆந்திர மாநில முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுகொண்ட சந்திரபாபு நாயுடு, வரும் 2-ம் தேதி 150-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி தினத்தன்று நாட்டிலேயே முதன்முறையாக தேசப்பிதா மகாத்மா காந்திக்கு விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கோயிலை திறந்து வைக்கிறார். தமிழக கிராமங்களில் இன்னமும் மக்க...
‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன் !

‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தமிழ் ட்ரைலரை வெளியிட்ட கமல்ஹாசன் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த ஆக்சன்  அட்வென்சர் படம் 'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' .இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.இந்த படத்தில் கத்ரீனா கைப் மற்றும் பாத்திமா சனா சேக் ஆகியோர் நடிக்கின்றனர்.இத்திரைப்படம் விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா அவர்கள் இயக்கி உள்ளார்.நவம்பர் 8 ஆம் தேதி உலகெங்கும் ரிலீஸ் ஆகா உள்ளது. https://youtu.be/unWwv107AlE பாலிவுட்டின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான்  ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்காக இணைந்து நடிக்கின்றனர்.இந்த படத்தை பற்றிய தகவலை வெளியிட அமிதாப் பட்சன் மற்றும் ஆமிர் கான் ஆகியோர் வீடியோ ஒன்றில் பேசி சமீபத்தில் வெளியிட்டனர்..தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகள் இவர்களால் டப் செய்யப்படவில்லை..பின்குரல் கொடுக்கும் கலைஞர்களை வைத்து டப்பிங் செய்துள்ளன...
பேயே இல்லாத ஹாரர் படம்…  சுந்தர் C நடிக்கும் ‘இருட்டு’

பேயே இல்லாத ஹாரர் படம்… சுந்தர் C நடிக்கும் ‘இருட்டு’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர் C நடிப்பில் VZ துரை இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் திரைப்படம் “ இருட்டு “. இப்படம் இதுவரை நாம் யாரும் கண்டிராத புது வகை ஹாரர் திரைப்படமாக இருக்கும். சுந்தர் C இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஹாரர் காமெடி படமான “ அரண்மனையின் ” இரண்டு பாகங்களையும் சுந்தர் C இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்படம் புதுமையான டார்க் ஹாரர் படமாக இருக்கும். முகவரி , நேபாளி , தொட்டி ஜெயா , 6 மெழுகுவர்த்திகள் போன்ற கல்ட் படங்களை இயக்கிய VZ துரை இப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறியது , ஆம் , இது புதுமையான ஹாரர் படம் தான். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன் என்றார். படத்தின் 8...
சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி !- சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத் தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணிய ஸ்தலம் சபரிமலை. மஹிஷி என்ற அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலை களுக்கிடையே ஒரு ‎மலையின் உச்சி யில் 914 மீட்டர் உயரத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு 10 முதல் 50 ‎வயதுக்குட்பட்ட பெண்கள் சமூக ரீதியாக இப்பயணத்தை ‎மேற்கொள்வதில்லை. மேலும் கோயிலுக்குள் செல்வதற்கு ‎அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த ‎வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரியப் பருவத்தில் இருக்கும் பெண்கள் இங்கு ‎வருவதை தடை செய்யப்பட்டதாலும் மேலும் இதர பல ‎காரணங்களாலும் பொதுவாக பெண்கள் இந்தக் கோயிலுக்கு ‎வருகை புரிவதில்லை என்ற நிலையில் சபரிமலை கோயில் வழிப்பாட்டில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தர்விட்டு பெண்களை ...