அண்ணாமலைக்கு சிறப்பு சேர்த்தது எனக்கு நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு – கலைப்புலி.S. தாணு”
“அண்ணாமைலைக்கு சிறப்பு சேர்த்து எனக்கு நெகிழ்ச்சியான ஒரு நிகழ்வு - கலைப்புலி.S. தாணு"
தமிழ்த் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரான (லேட்).அண்ணாமலை அவர்களுக்கு மரியாதை தரும் விதமாக, அவரின் திருவுருவப்படத்தை "அபிராமி" ராமநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
ரோகினி திரையரங்கு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், "ரோகினி" திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் அவர்களுடன், கலைப்புலி.S.தாணு, "அபிராமி" ராமநாதன் அருள்பதி, அழகன், K.ராஜன், சக்தி பிலிம் பேக்ட்ரி B.சக்திவேலன், "திருச்சி" மீனாட்சி சுந்தரம், "ராக் போர்ட்" முருகானந்தம், "சேலம்" மனோகரன், ஈஸ்வரன் என திரைத்துறையை சேர்ந்த பலர் இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்தனர்.
அவ்விழாவில் பேசிய பலரும் (லேட்)அண்ணாமலை அவர்களுடனான நட்பையும், நினைவுகளையும் பகிர்ந்துக் கொண்டனர்.
"ரோகினி" திரையரங்கு உரிமையாளர் பன்னீர் செல்வம் பேசியதாவது,
...









